பூர்வீகம் கேட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு பிரமதர் மோடி பதிலடி

பூர்வீகத்தை கூறுமாறு இளைஞர் காங்கிரஸ் தலைவர் சல்மான் நிஸாமி கேட்ட கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பதிலடி அளித்தார்.
பூர்வீகம் கேட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு பிரமதர் மோடி பதிலடி

குஜராத் மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 9-ந் தேதி சனிக்கிழமை (இன்று) நடைபெறுகிறது. இதையடுத்து டிசம்பர் 14-ந் தேதி 2-ஆம் கட்ட வாக்குப்பதிவும், டிசம்பர் 18-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.

இந்நிலையில், அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2-ஆம் கட்ட தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

காங்கிரஸ் மூத்த தலைவரான மணிசங்கர் ஐயர், பிரதமர் மோடி மீது முன்வைத்த விமர்சனம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது அவ்வகையில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சல்மான் நிஸாம் கூறிய கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. குஜராத்தில் முகாமிட்டுள்ள சல்மான், அங்கு காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அச்சமயம் தனது ட்விட்டர் பக்கத்தில், ராகுல் அவர்களின் தந்தை ராஜீவ் இந்த தேசத்துக்காக உயிரிழந்தவர். பாட்டி இந்திராவும் தேசத்துக்காக உயிரிழந்தவர். பாட்டனார் ஜவஹர்லால் நேரு, இந்திய சுதந்திரத்துக்காக போராடியவர். ஆனால், நரேந்திர மோடியின் தந்தை யார், பாட்டனார் யார் என்று பதிவிட்டிருந்தார்.

இதனிடையே 2-ஆம் கட்ட தேர்தலுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருக்கும் பிரதமர் மோடி, குஜராத்தின் லுனவாடாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

என்னையும், எனது குடும்பத்தையும் கீழ்தரமாக விமர்சிக்கும் அனைத்து காங்கிரஸ்காரர்களுக்கும் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். இந்திய தேசம் தான் எனக்கு எல்லாமே, 125 கோடி இந்தியர்களுக்காக அர்பணிக்கப்பட்டதுதான் எனது வாழ்க்கை. 

இளைஞர் காங்கிரஸ் தலைவர் சல்மான், ராகுலின் குடும்பம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையாக குறிப்பிட்டுள்ளார். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால், அவர் என்னைக் கேட்டது போன்று கேள்விகளை யாரும் தங்களின் எதிரிகளிடம் கூட கேட்கக் கூடாது. 

இந்த நாட்டில் உள்ள முஸ்லிம் சமுதாயத்திடம் பொய்யான வாக்குறுதிகளை காங்கிரஸ் அள்ளி வீசி வருகிறது. ஆனால், உண்மையில் அவர்களுக்கான நல்ல திட்டங்கள் எதையும் செயல்படுத்தியதில்லை. இந்தியாவை ஆட்சி செய்தபோதும், தற்போது அவர்கள் ஆட்சி செய்து வரும் மாநிலங்களிலும் காங்கிரஸ், முஸ்லிம்களை புறக்கணித்துதான் உண்மை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com