இந்தியாவுடனான ஒப்பந்தங்களின்போது ராணுவ ரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்

இந்திய தனியார் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து செயல்படும்போது அமெரிக்காவின் ராணுவ ரகசியத் தகவல்கள் பாதுகாக்கப்படுவதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை நிறுவனங்கள்

இந்திய தனியார் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து செயல்படும்போது அமெரிக்காவின் ராணுவ ரகசியத் தகவல்கள் பாதுகாக்கப்படுவதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.
இதுகுறித்து அமெரிக்க-இந்திய வர்த்தகக் கவுன்சில் அமைப்பின் பாதுகாப்பு மற்றும் விமானப் பிரிவு முதுநிலை இயக்குநர் பெஞ்சமின் ஷ்வார்ட்ஸ் கூறியதாவது:
பாதுகாப்புத் தளவாடங்கள், தொழில்நுட்பங்கள், கருவிகள் ஆகியவற்றைத் தாயாரிப்பது போன்ற வர்த்தக நடவடிக்கைகளை இந்தியாவின் தனியார் நிறுவனங்களோடு இணைந்து மேற்கொள்ளும்போது, அமெரிக்காவின் மிக முக்கியமான ரகசிய ராணுவத் தகவல்களையும் பரிமாறிக் கொள்ள வேண்டியிருக்கும்.
அப்போது, அந்தத் தகவல்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
அதுதவிர, பொறுப்பை வரையறுத்தல், அறிவுசார் சொத்துரிமைகள் பாதுகாப்பு, தொழிற்சாலைப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையிலும் இந்திய அரசுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மிகவும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ரகசியத் தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள அமெரிக்க நிறுவனங்கள் தயாராக உள்ளன. 
எனினும், அந்தத் தகவல்களைப் பாதுகாப்பதற்கான நெறிமுறை தற்போது இந்தியாவிடம் இல்லை.
எனவே, ரகசிய ராணுவத் தகவல்களை மிகவும் பாதுகாப்பான முறையில் பரிமாறிக் கொள்வதற்கான நெறிமுறைகளை இந்தியா உருவாக்க வேண்டியது அவசியம். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்வது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசுடன் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம் என்றார் அவர்.
இந்திய மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை நிறுவனங்களிடையே வர்த்தக ஒப்பந்தங்கள் ஏற்படுவதில் அமெரிக்க-இந்திய வர்த்தகக் கவுன்சில் முக்கியப் பங்கு வகித்து வருவது குறிப்பிடதத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com