எதிர்வரும் அனைத்து தேர்தல்களையும் வாக்குச்சீட்டு முறையில் நடத்தத் தயாரா?

எதிர்வரும் அனைத்து தேர்தல்களையும் வாக்குச்சீட்டு முறையில் நடத்தத் தயாரா? என்று பாஜகவுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சவால் விடுத்துள்ளார்.
எதிர்வரும் அனைத்து தேர்தல்களையும் வாக்குச்சீட்டு முறையில் நடத்தத் தயாரா?

எதிர்வரும் அனைத்து தேர்தல்களையும் வாக்குச்சீட்டு முறையில் நடத்தத் தயாரா? என்று பாஜகவுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சவால் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பாஜக தங்களை நேர்மையான கட்சி என்றும், வெளிப்படையான கட்சி என்றும் கருதினால், நாட்டில் இனிமேல் நடைபெறவுள்ள அனைத்துத் தேர்தல்களையும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடத்தாமல், வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக எழுப்பப்படும் புகார் தொடர்பான விவகாரத்தில் பாஜக மௌனம் காப்பதில் இருந்து, 2014ஆம் ஆண்டு முதல் இதுவரை நடந்தத் தேர்தல்களில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரிகிறது.
2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் பின்னடைவைச் சந்தித்தது. உத்தரப் பிரதேசத்தில் நிகழாண்டில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலிலும் பின்னடைவைச் சந்தித்தது. தேர்தல் முறைகேடுகளே இதற்கு காரணமாகும்.
தலித்துகள், பழங்குடியினர், இதரபிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிராக ஹிந்து மதத்தை காப்போராக தங்களைக் காட்டிக் கொள்வோரால் (பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பை குறிப்பிட்டார்) ஜாதீய, மதவாத பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. இதுபோன்ற செயல்பாடுகளினால்தான், டாக்டர் அக்பேத்கர் லட்சக்கணக்கான தனது ஆதரவாளர்களுடன் பௌத்த மதத்தை தழுவினார். ஹிந்து மதத்துக்கு எதிரானவர் அவர் கிடையாது. ஆனால், அதில் காட்டப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை அவர் எதிர்த்தார்.
"பௌத்த மதத்தை தழுவுவேன்': சமூகத்தில் பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கு எதிராக பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தற்போது கடைப்பிடித்து வரும் போக்கை மாற்றிக் கொள்ளவில்லையெனில், கோடிக்கணக்கானோருடன் சேர்ந்து நான் பௌத்த மதத்தை தழுவுவேன்.
மத்தியிலும், மாநிலத்திலும் தனது நிர்வாகம் தோல்வியடைந்து விட்டதை மறைப்பதற்கு, மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டும் பணியை பாஜக தொடங்கும். 
எனவே, தேர்தலுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும். தேர்தலில் வாக்குகளுக்காக தேசியத்துவத்தை வைத்து பாஜக விளையாடி வருகிறது என்று மாயாவதி குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com