குஜராத் முதல்கட்டத் தேர்தலில் 66.75% வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

குஜராத் சட்டப் பேரவைக்கு முதல் கட்டமாக சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 66.75 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

குஜராத் சட்டப் பேரவைக்கு முதல் கட்டமாக சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 66.75 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து குஜராத் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
முதல் கட்டத் தேர்தலில் 66.75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2.12 கோடி வாக்காளர்களில் 1.41 கோடி பேர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். 
இதில் அதிகபட்சமாக, நர்மதா மாவட்டத்தில் 79.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மிகக் குறைவாக, தேவ்பூமி-துவாரகை தொகுதியில் 59.39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
12 மாவட்டங்களில் 70 சதவீதத்துக்கும் குறைவாக வாக்குகள் பதிவாகியுள்ளன. 7 மாவட்டங்களில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, குஜராத் சட்டப் பேரவையின் 89 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என்று கணித்திருப்பதாக தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்திருந்தது. வாக்குப்பதிவு இறுதி நிலவரம் ஞாயிற்றுக்கிழமையே தெரிய வரும் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com