சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக சைக்கிள் ஓட்டிய பாரிக்கர்!

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் சைக்கிள்ஓட்டினார்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக சைக்கிள் ஓட்டிய பாரிக்கர்!

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் சைக்கிள்ஓட்டினார்.
கோவா தலைநகர் பனாஜிக்கு அருகில் உள்ள போர்வோரிம் பகுதியில் "நோமோசோ' (மோட்டார் வாகனங்கள் இல்லாத மண்டலம்) என்ற நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அங்குள்ள சமூக அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த இந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக ஒரு சாலையில் மோட்டார் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பங்கேற்று நடனம், வீதி நாடகங்கள், கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்தினர். தற்காப்புக் கலைக் குழுவைச் சேர்ந்த சிலர் தங்கள் திறன்களை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் பங்கேற்றார். அப்போது அவர் சிறிது தூரம் சைக்கிள் ஓட்டிச் சென்றார். இந்த நிகழ்ச்சியில் மாநில வருவாய்த் துறை அமைச்சரும் உள்ளூர் எம்.எல்.ஏ.வுமான ரோஹன் கௌண்டேவும் கலந்து கொண்டார். அப்போது பாரிக்கர் பேசியதாவது:
பசுமையான கோவா என்பது நிலக்கரியை எதிர்ப்பதால் மட்டுமே சாத்தியமாகாது. நாம் அதற்குப் பங்காற்ற வேண்டும். எனக்கு அவ்வப்போது சைக்கிள் ஓட்ட வேண்டும் என்றுதான் விருப்பம். ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக என்னால் சைக்கிள் ஓட்ட முடிவதில்லை.
பனாஜி நகரில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
நகரின் போக்குவரத்து சார்ந்த பிரச்னைகளை மனதில் கொண்டு இந்த நிகழ்ச்சியை மேம்படுத்த வேண்டும். பனாஜியில் நடந்து செல்வதற்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் அதன் மூலம் வாகனப் பயன்பாட்டைக் குறைத்து, மாசுக் கட்டுப்பாட்டுக்கு வழிவகுப்பதாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார் பாரிக்கர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com