செலாவணி முறி சட்டத் திருத்த மசோதா: மத்திய அரசு திட்டம்

கணக்கில் பணமில்லாமல் காசோலைகள் அளிப்பதைக் குற்றமாக்கும் செலாவணி முறிச் சட்டத்தில் (நெகோஷியபிள் இன்ஸ்ட்ருமென்ட் சட்டம்) திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதா, எதிர்வரும் நாடாளுமன்ற

கணக்கில் பணமில்லாமல் காசோலைகள் அளிப்பதைக் குற்றமாக்கும் செலாவணி முறிச் சட்டத்தில் (நெகோஷியபிள் இன்ஸ்ட்ருமென்ட் சட்டம்) திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதா, எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதுகுறித்து நிதியமைச்சக உயர்நிலை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
செலாவணி முறிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பான பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதற்கான வரைவு மசோதா இறுதி வடிவம் பெற்று வருகிறது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அந்த வரைவு மசோதா, வரும் குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும்.
மின்னணு பணப் பரிவர்த்தனையின் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வரும் தற்போதைய காலகட்டத்தில், கணக்கில் பணமில்லாமல் திரும்ப வரும் காசோலைகளைக் குறித்த தகவல், அவற்றை அளித்தவர்களுக்கு உடனடியாகத் தெரிவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அதற்கேற்ற வகையில், செலாவணி முறிச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர மத்திய அரசு விரும்புகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார். இந்த மாதம் 15-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.
கணக்கில் பணமில்லாமல் காசோலைகள் அளிக்கப்பட்டது தொடர்பாக நாடு முழுவதும் செலாவணி முறிச் சட்டத்தின் கீழ் 18 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், அந்தச் சட்டத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
காசோலை திரும்பியது தொடர்பான வழக்குகளை, காசோலை அளித்தவர் வசிக்கும் பகுதிக்குப் பதிலாக, காசோலை பெற்றவரின் பகுதியைச் சேர்ந்த நீதிமன்றங்களியே தொடர அந்தத் திருத்தம் வழிவகை செய்தது. இந்த நிலையில், அதிகரித்து வரும் மின்னணுப் பணப் பரிவர்த்தனைக்கு ஏற்ப, செலாவணி முறிச் சட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என்று 2017-18-ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com