ஜம்மு-காஷ்மீர் எல்லையில் 23 ஆயிரம் பதுங்கு குழிகள்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லையில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டு வருவதாக பிரதமர் அலுவலக விவகாரத் துறை
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் 23 ஆயிரம் பதுங்கு குழிகள்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லையில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டு வருவதாக பிரதமர் அலுவலக விவகாரத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
கதுவா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதியில் மொத்தம் 23,700 பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், 19 ஆயிரம் பதுங்கு குழிகள் பொதுமக்கள் பதுங்கும் வகையிலும், 4,700 பதுங்கு குழிகள் கால்நடைகளையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் வகையிலும் கட்டப்படும்.
எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தும்போது, கால்நடைகள் பலியாவதைத் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் மட்டுமல்லாது கிராமப் பகுதிகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது. கதுவாவில் அனைத்து இயற்கை வளங்களும் உள்ளன. எனவே, இப்பகுதி தொழில்வளமிக்க இடமாக மாறுவதற்கு அனைத்து வாய்ப்புகளும் உள்ளன என்றார்.
முன்னதாக, சம்பா-கதுவா இடையே 14.70 கி.மீ. தொலைவுக்கு ரூ.15 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் சாலை மேம்பாட்டுப் பணியை அவர் தொடங்கி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com