டிச.16-இல் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்கிறார் ராகுல்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் தலைவர் பொறுப்பை, வரும் 16-ஆம் தேதியன்று ஏற்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிச.16-இல் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்கிறார் ராகுல்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் தலைவர் பொறுப்பை, வரும் 16-ஆம் தேதியன்று ஏற்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்றைய தினம், தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில், 132 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியின் பொறுப்பை, ராகுல் காந்தியிடம் சோனியா காந்தி அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கவுள்ளார். அதன் பிறகு, நாடு முழுவதும் வரவிருக்கும் கட்சியின் தலைவர்களை ராகுல் காந்தி சந்தித்துப் பேசுவார் என்று கட்சியின் தேர்தல் குழுத் தலைவர் முல்லபள்ளி ராமச்சந்திரன், ஞாயிற்றுக்கிழமை கூறினார். காங்கிரஸ் தலைவராக இருக்கும் சோனியா காந்தி, உடல் நலக் குறைவு காரணமாக, தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வருகிறார்.
இந்த நிலையில், கட்சியின் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்துவதற்கு கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கை, கடந்த 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்தலில், காங்கிரஸ் தலைவராவதற்கு விருப்பம் தெரிவித்து, அக்கட்சியைச் சேர்ந்த 89 பேர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். அதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி, கடந்த 4-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கு, திங்கள்கிழமை (டிச.11) கடைசி நாளாகும். அன்றைய தினமே, காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது.
எனினும், காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழ், அவரிடம் வரும் 16-ஆம் தேதி சோனியா காந்தி முன்னிலையில் வழங்கப்படவுள்ளது. அடுத்த இரு தினங்களில், அதாவது வரும் 18-ஆம் தேதி, குஜராத், ஹிமாசலப் பிரதேசம் ஆகிய மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன.
எனவே, இந்தத் தேர்தல் முடிவுகள், ராகுல் காந்தியின் அரசியல் பயணத்தில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதனால், குஜராத் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்தில் ராகுல் காந்தி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com