முதல்வர் பதவி மீது ஆசை இல்லை: அகமது படேல்

குஜராத் முதல்வராக வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை; இனிமேலும் அந்த ஆசை ஏற்படாது என்று குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான அகமது படேல் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது:
நான் குஜராத் முதல்வர் பதவியை விரும்புவதாக பாஜகவினர் தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். இதில் துளியளவும் உண்மையில்லை. குஜராத் முதல்வராக வேண்டும் என்ற ஆசை இதற்கு முன்பு இருந்ததில்லை, இனிமேலும் அந்த ஆசை ஏற்படாது என்றார் அவர். 
சில நாள்களுக்கு முன்பு, சூரத் நகரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில், "அகமது படேலை குஜராத் முதல்வராக்க காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும்' என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2001-ஆம் ஆண்டு முதல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகராக அகமது படேல் உள்ளார். மத்தியில் கடந்த 2004, 2009-ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்ததில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com