உச்ச நீதிமன்றத்தின் அதிருப்தி எதிரொலி: பணியை கைவிடுவதாக மூத்த வழக்குரைஞர் அறிவிப்பு

நீதிபதிகளை மிரட்டும் தொனியில் மூத்த வழக்குரைஞர்கள் வாதாடுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கண்டனம் தெரிவித்ததை அடுத்து, வழக்குரைஞர் பணியில்

நீதிபதிகளை மிரட்டும் தொனியில் மூத்த வழக்குரைஞர்கள் வாதாடுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கண்டனம் தெரிவித்ததை அடுத்து, வழக்குரைஞர் பணியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவாண் திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு அயோத்தி வழக்கில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் கபில் சிபல், துஷ்யந்த் தவே ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டனர். 
அதேபோல தில்லி அரசு -துணை நிலை ஆளுநர் இடையிலான அதிகாரம் குறித்த வழக்கில் தில்லி அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவாண் வாதிட்டார்.
இந்த வழக்குகளின்போது வழக்குரைஞர்கள், தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க வேண்டுமென்று நீதிபதிகளை மிரட்டுவதுபோல வாதாடுவதாகவும், நீதிமன்ற அறையில் கூச்சலிடுவதாகவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அதிருப்தி தெரிவித்திருந்தார். 
மேலும், இதுபோன்று செயல்படும் வழக்குரைஞர்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக தீபக் மிஸ்ராவுக்கு ராஜீவ் தவாண் ஒரு கடிதம் எழுதியுள்ளார். 
அதில், தில்லி அரசு - துணை நிலை ஆளுநர் இடையிலான அதிகாரம் தொடர்பான வழக்கு முடிந்த பிறகு வழக்குரைஞர் தொழிலை விட்டுவிடலாம் என்று முடிவு செய்துள்ளேன். 
எனக்கு அளிக்கப்பட்டுள்ள மூத்த வழக்குரைஞர் பொறுப்பை ரத்து செய்யும் அதிகாரம் உங்களுக்கு உண்டு. அதனைக் கருத்தில் கொண்டு வழக்குரைஞர் பணியைக் கைவிட முடிவு செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
பொதுவாக வழக்குரைஞர் தங்கள் பணியில் இருந்து விலகுவதை நீதிபதிகளிடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. 
எனினும், நீதிபதி தீபக் மிஸ்ரா தன் மீது குற்றம்சாட்டியதை அடுத்து அவருக்கு ராஜீவ் தவாண் கடிதம் எழுதியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com