அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் வினாத்தாள்: உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தகவல்

அடுத்த ஆண்டு (2018) முதல் மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு (நீட்) ஒரே மாதிரியான வினாத்தாள் தயாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்
அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் வினாத்தாள்: உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தகவல்

அடுத்த ஆண்டு (2018) முதல் மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு (நீட்) ஒரே மாதிரியான வினாத்தாள் தயாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஹிந்தி உள்ளிட்ட சில வடமொழிகளில் நீட் வினாத்தாள் எளிதாகவும், வங்கம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கடினமாகவும் வடிவமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 
இது ஒரு தரப்பு மாணவர்களுக்கு சாதகமான நடவடிக்கை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இதையடுத்து, அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியான நீட் வினாத்தாளை தயாரிக்க வேண்டும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) உத்தரவிட வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பில் இருந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 
இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, மோகன் சந்தானகெளடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன.
அப்போது, 'வரும் 2018-ஆம் ஆண்டு முதல் அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியான நீட் வினாத்தாள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று சிபிஎஸ்இ தரப்பில் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. 
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஒரே மாதிரியான நீட் வினாத்தாள் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை முடித்து வைப்பதாக அறிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com