இந்தியர்களுக்கு பிரிட்டன் விசாக்கள் வழங்கல் அதிகரிப்பு!

இந்தியர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் அதிகரித்துள்ளதாக தில்லியில் உள்ள பிரிட்டன் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தியர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் அதிகரித்துள்ளதாக தில்லியில் உள்ள பிரிட்டன் தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தில்லியில் உள்ள பிரிட்டன் தூதரக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: 
2016, செப்டம்பர் முதல் 2017, செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்தியர்கள் 5.17 லட்சம் பேருக்கு விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9 சதவீதம் அதிகமாகும். இதில் 4.27 லட்சம் பேருக்கு சுற்றுலா விசா வழங்கப்பட்டுள்ளது. 
இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11 சதவீதம் அதிகமாகும். மேலும், வேலை விசாக்கள் 53,000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதன் விகிதத்தில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. இதேபோல ஓராண்டில் 14,000 மாணவர் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 
இது 27 சதவீதம் அதிகமாகும். மேலும், குறுகிய கால படிப்புக்காக 5,000 இந்திய மாணவர்களுக்கு விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டில் மொத்தம் இந்தியர்களுக்கு 4,70,470 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக இந்தியாவிற்கான பிரிட்டன் தூதர் டொமினிக் அஸ்கியூத் கூறியதாவது: 
இந்தியர்களுக்கு அதிகளவில் விசா வழங்கப்படுவதை நான் வரவேற்கிறேன். விசாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வரும் தரவுகள் இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்குமான உறவுகள் மேம்பட்டு வருவது என்பதற்கு சான்றாக உள்ளது. இந்திய மாணவர்கள் உலகத் தரத்திலான உயர் கல்வியைப் பெறுவதற்கு இங்கிலாந்தை தேர்ந்தெடுப்பதை வரவேற்கிறேன். 
பிரிட்டன் விசாவிற்கு விண்ணப்பிக்கும் 90 சதவீதமான இந்தியர்களுக்கு விசா கிடைக்கிறது. இதில் 99 சதவீதம் விசாக்கள் 15 நாள்களுக்குள் வழங்கப்படுகின்றன. இங்கிலாந்தை தனது உறவு நாடாக இந்தியர்கள் பார்க்க வேண்டும். கல்வி, வணிகம், சுற்றுலா என அனைத்துத் துறைகளிலும் இந்தியர்கள் இங்கிலாந்திற்கு வருகை தர வேண்டும். லண்டன் மேயர், இந்தியா வந்து சென்றது, இந்தியாவுடனான நல்லுறலுக்குச் சான்றாகும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com