'ஒக்கி' புயல் நிவாரண நடவடிக்கைகள்: மத்திய அமைச்சர்களுடன் தமிழக ஆளுநர் ஆலோசனை

தமிழகத்தில் ஒக்கி புயல் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவி அளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்களிடம் மாநில ஆளுநர் புரோஹித் பன்வாரிலால் நேரில் வலியுறுத்தினார்.
தில்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை செவ்வாய்க்கிழமை சந்தித்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
தில்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை செவ்வாய்க்கிழமை சந்தித்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

தமிழகத்தில் ஒக்கி புயல் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவி அளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்களிடம் மாநில ஆளுநர் புரோஹித் பன்வாரிலால் நேரில் வலியுறுத்தினார்.
தமிழக ஆளுநர் புரோஹித் பன்வாரிலால் ஞாயிற்றுக்கிழமை இரவு தில்லி வந்தார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அவர், திங்கள்கிழமை தில்லி ஆந்திர பவனில் நடைபெற்ற ஐந்து மாநில ஆளுநர்கள் குழுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
அன்று இரவு குடியரசுத் தலைவர் மாளிகையில் பன்வாரிலால் உள்ளிட்ட ஐந்து மாநில ஆளுநர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில், தில்லியில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை அவர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தின் நீர் ஆதாரத்தை பெருக்குவது குறித்து விவாதித்தார். பின்னர், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்துப் பேசினார். 
அப்போது, 'ஒக்கி' புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவி அளிக்க வேண்டும் என்று அமைச்சர்களிடம் ஆளுநர் வலியுறுத்தினார். அந்த மாவட்டத்தில் டிசம்பர் 7-ஆம் தேதி தாம் சென்றபோது கிடைத்த தகவலின் அடிப்படையிலான சூழல் குறித்து எடுத்துரைத்தார். மத்திய அமைச்சர்களுடனான சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் ஆளுநர் பேசியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com