ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை 65 வயது வரை மறுபணியமர்த்த அனுமதி

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை 65 வயது வரை, தகுதியின் அடிப்படையில் மறுபணியமர்த்த பரிசீலிக்கலாம் என்று ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. முன்பு இதற்கான வயது வரம்பு 62 ஆக இருந்தது.

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை 65 வயது வரை, தகுதியின் அடிப்படையில் மறுபணியமர்த்த பரிசீலிக்கலாம் என்று ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. முன்பு இதற்கான வயது வரம்பு 62 ஆக இருந்தது.
இது தொடர்பாக அனைத்து ரயில்வே பொது மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பியுள்ளது. அதில், ஓய்வுபெற்ற பிறகும் உரிய உடல் தகுதி, பணி செய்யும் திறனுடன் உள்ள முன்னாள் ஊழியர்களை ரயில்வே பணிகளுக்கு 65 வயது வரை மறுபணியமர்த்த பரிசீலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் இருந்து ஓய்வூதியத்தை கழித்த பிறகு வரும் மீதித் தொகை மட்டுமே சம்பளமாக வழங்கப்படும். இப்போது, ரயில்வே ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60-ஆக உள்ளது. 
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com