காஷ்மீரில் மழை, பனிப் பொழிவு: போக்குவரத்து பாதிப்பு: நடுவழியில் சிக்கித் தவித்த 70 பேர் மீட்பு

காஷ்மீரில் கன மழை மற்றும் கடும் பனிப் பொழிவு காரணமாக சாலை மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காஷ்மீரில் கன மழை மற்றும் கடும் பனிப் பொழிவு காரணமாக சாலை மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அந்த மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து ஜம்முவுக்குச் செல்லும் தேசிய 300 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை, தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது. 
காஷ்மீர் பகுதியை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே சாலையான இது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், பனிஹால், ராம்பன், பத்னிடாப் ஆகிய பகுதிகளில் கன மழையும், ஜவாஹர் மலைச் சுரங்கப் பாதையின் இரு புறமும் கடும் பனிப்பொழிவும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளதாகக் கூறிய அதிகாரிகள், பதியால் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறினர்.
இதுதவிர, சோஃபியான் மாவட்டத்துடன் பூஞ்ச் மற்றும் ரஜெளரி மாவட்டங்களை இணைக்கும் முகலாயர் சாலையும், பீர் கி கலி பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.
விமானப் போக்குவரத்து பாதிப்பு: இதற்கிடையே கடும் பனிப் பொழிவு காரணமாக, ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் பார்வையை மறைக்கும் அளவுக்கு பனி மூட்டமாக இருப்பதால், விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து விமான நிலைய இயக்குநர் சரத் குமார் கூறுகையில், பனி மூட்டம் காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதும், வருவதும் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பனி மூட்டம் குறைந்தால் மீண்டும் விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.
70 பேர் மீட்பு: இதற்கிடையே, மழை, பனிப் பொழிவு காரணமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சுரான்கோட் பகுதியில் நடுவழியில் சிக்கித் தவித்த 70 பேர் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com