மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யவே முடியாது: டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை; அவற்றில் முறைகேடு செய்யவே முடியாது என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யவே முடியாது: டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை; அவற்றில் முறைகேடு செய்யவே முடியாது என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் ஹைதராபாதில் பிடிஐ செய்தியாளருக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என்பதை உறுதியாக நம்புகிறேன். அவற்றில் முறைகேடு செய்ய முடியும் என்பதை யாரும் நிரூபிக்காத வரை இந்த நம்பிக்கை தொடரும். எனது அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகமானவை என்று நிச்சயமாகக் கூற முடியும்.
தேர்தல்களில் சில இயந்திரங்கள் சரியாக இயங்காதது குறித்துக் கேட்கிறீர்கள். இயந்திரங்கள் தவறிழைக்காது. அவற்றை இயக்கும் மனிதர்கள் தவறிழைக்கலாம். அந்த இயந்திரங்களைக் கையாள்பவர்களுக்கு அவற்றை எவ்வாறு இயக்குவது என்பது தெரியாமல் இருக்கலாம். அல்லது அவற்றை இக்கும்போது சில தவறுகளை அவர்கள் செய்திருக்கலாம். அவர்களுக்கு உரிய பயிற்சி இல்லாமலும் இருந்திருக்கலாம்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் தவறு ஏதுமில்லை என்பது பல்வேறு சோதனைகளில் உறுதியாகியுள்ளது. இந்த இயந்திரங்கள் நாட்டின் பெருமிதமாகும். அவற்றால் நாம் பெருமளவுக்கு காகிதத்தையும் நேரத்தையும் சேமித்துள்ளோம்.
வாக்குச்சீட்டு முறை அமலில் இருந்தபோது வாக்குப்பெட்டிகள் தூக்கிச் செல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால் தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி கேட்க எந்தக் காரணமும் இல்லை. அவற்றின் மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விமர்சிப்போர் தங்கள் அறியாமை கோரணமாகவோ, தங்களின் தோல்விக்கு ஒரு காரணத்தைக் கூறுவதற்காகவே அவற்றை விமர்சிக்கின்றனர். அவற்றின் மீது புகார் அளித்தவர்களின் வரலாற்றைப் பாருங்கள். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கும் தங்கள் கட்சிகள் தேர்தலில் தோற்றபோது வாக்குப்பதிவு இயந்திரங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு சென்றனர். எனினும், அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அமைதியாகி விட்டனர். இந்த முறை அமரீந்தர் சிங் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடு மூலமே வெற்றி பெற்று முதல்வராகியுள்ளார்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. அந்த இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளும், காவல் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிளும் சிஆர்பிஎஃப் படையினரின் காவலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவற்றில் உள்ள சில்லுகளை எவ்வாறு மாற்ற முடியும்? அவ்வாறு நடைபெறலாம் என்பது அச்சம்தானே தவிர நடைமுறை உண்மை அல்ல என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com