வெளிப்படையான வாக்கெடுப்பு மூலம் மேலவைத் தேர்தலை நடத்த வேண்டும்: அசோக் சவாண் வலியுறுத்தல்

மகாராஷ்டிர சட்ட மேலவைக்கான தேர்தலை வெளிப்படையான வாக்கெடுப்பு முறையில் நடத்த வேண்டும் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவாண் வலியுறுத்தியுள்ளார்.
வெளிப்படையான வாக்கெடுப்பு மூலம் மேலவைத் தேர்தலை நடத்த வேண்டும்: அசோக் சவாண் வலியுறுத்தல்

மகாராஷ்டிர சட்ட மேலவைக்கான தேர்தலை வெளிப்படையான வாக்கெடுப்பு முறையில் நடத்த வேண்டும் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவாண் வலியுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் அண்மையில் சட்ட மேலவைக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸைச் சேர்ந்த நாராயண் ராணே அக்கட்சியில் இருந்து விலகியபோது மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்ததால் இத்தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இத்தேர்தலில் மாநிலத்தின் இப்போதைய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள், பாஜக வேட்பாளர் பிரசாத் லாடை ஆதரித்து வாக்களித்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இத்தேர்தல் மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவாணுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. 
இந்நிலையில், அவர் நாகபுரியில் பிடிஐ செய்தியாளரிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
சட்ட மேலவைத் தேர்தலை ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்துவது முறைகேடுகளுக்கு வாய்ப்பளிக்கிறது. எனவே வெளிப்படையான முறையிலேயே இத்தேர்தலை நடத்த வேண்டும்.
இது தொடர்பாக மறைந்த விலாஸ்ராவ் தேஷ்முக், மகாராஷ்டிர முதல்வராக இருந்தபோது ஒரு முன்மொழிவு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. அவரைத் தொடர்ந்து முதல்வர் பதவியை ஏற்ற நானும் ரகசிய வாக்கெடுப்புக்கு பதிலாக வெளிப்படையான வாக்கெடுப்பையே விரும்பினேன். இந்த மாற்றத்தை வலியுறுத்தி ஆதரவும் திரட்டினேன். ரகசிய வாக்கெடுப்பு முறையை மாற்ற நான் முயற்சித்தேன். ஏனெனில் ரகசிய வாக்கெடுப்பில் யார் அணிமாறி வாக்களித்தனர் என்பதை யாராலும் கூற முடியாது. அது கவலையளிக்கிறது. எனவேதான், மேலவைத் தேர்தலில் வெளிப்படையான வாக்கெடுப்பை நான் வலியுறுத்துகிறேன். இத்தகைய தேர்தல்களில் பணபலம் பயன்படுத்தப்படக் கூடாது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com