இயற்கை பேரிடர்: கேரளம் உள்ளிட்ட3 மாநிலங்களுக்கு ரூ.305 கோடி

இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட கேரளம், மணிப்பூர், மிúஸாரம் ஆகிய 3 மாநிலங்களுக்கு ரூ.305.14 கோடி நிதி உதவி அளிப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட கேரளம், மணிப்பூர், மிúஸாரம் ஆகிய 3 மாநிலங்களுக்கு ரூ.305.14 கோடி நிதி உதவி அளிப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங், மத்திய உள்துறைச் செயலர் ராஜீவ் மகரிஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், வெள்ளம், நிலச்சரிவினால் 2016-17ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்டிருக்கும் மணிப்பூர், மிúஸாரம் ஆகிய மாநிலங்களுக்கும், வறட்சியால் 20161-17இல் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கும் மொத்தம் ரூ.305.14 கோடி நிதி உதவி அளிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி கூறுகையில், "மணிப்பூருக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.130.65 கோடி உதவித் தொகை அளிக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. 
கேரளத்துக்கான ரூ.125.47 கோடியில், ரூ.112.05 கோடியை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும், ரூ.13.42 கோடியை தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்தில் இருந்தும் அளிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. மிúஸாரத்துக்கு ரூ.49.02 கோடி உதவித் தொகை அளிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. 
அதில் ரூ.42.77 கோடியை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும், ரூ.6.25 கோடியை தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்தில் இருந்தும் அளிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com