ஒரே பள்ளி ஆசிரியர்கள் திருமணம் செய்வதா? பள்ளி நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை! 

ஜம்மு காஷ்மீரில் ஒரே பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த பொழுது,  திருமண நாளன்று இருவரையும் நிர்வாகம் பணியிலிருந்து நீக்கிய சம்பவம் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே பள்ளி ஆசிரியர்கள் திருமணம் செய்வதா? பள்ளி நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை! 

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஒரே பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த பொழுது,  திருமண நாளன்று இருவரையும் நிர்வாகம் பணியிலிருந்து நீக்கிய சம்பவம் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் புலவாமா மாவட்டம் ட்ரால் நகரத்தினைச் சேர்ந்தவர்கள் தாரிக் பட் மற்றும் சுமையா பஷீர். இவர்களிருவரும் அங்குள்ள பாம்போர் இஸ்லாமியக் கல்வி நிறுவனத்தில் கடந்த பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்கள்.

அவர்கள் இருவருக்கும் கடந்த மாதம் 30-ஆம் தேதியன்று திருமணம் நடந்தது, ஆனால் அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக திருமண நாளன்றே அவர்களிருவரையும் பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்து விட்டது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரை செய்தி நிறுவனம் ஒன்று தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.

அதே நேரம் பள்ளி தாளாளர் பஷீர் மசூதி செய்தியாளரிடம், 'சம்பந்தப்பட்ட இருவரும் திருமணத்திற்கு முன்பாக காதல் உறவில் இருந்ததாலேயே பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாகத்  தெரிவித்தார். இத்தகைய நடவடிக்கையானது பள்ளியில் பயிலும் 2000 மாணவர்கள் மற்றும் 200 ஆசிரியர்களுக்கு ஒரு சரியான விஷயமாக   இருக்காது என்றும், மாணவர்களின் படிப்பினை அது பாதிக்கும் என்றும் தெரிவித்தார்.

ஆனால் தாரிக் பட் மற்றும் சுமையா பஷீர். இருவரும் இதனை மறுத்த்து தங்கள் திருமணம் ஒரு நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று தெரிவித்தனர். சில மாதங்களுக்கு முன்பாக தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்றும், இது பள்ளியில் உள்ள அனைவருக்கும் தெரியும் என்றும் அவர்கள் கூறினர். இதன் பொருட்டு சுமையா அளித்த விருந்தொன்றில் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் என்று தாரிக் பட் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் கூறியதாவது:

காதல் உறவில் நாங்கள் இருந்ததாக அவர்கள் கருதுவதுதான் பணி நீக்கத்திற்கான காரணம் என்றால், அதுபற்றி முறையாக விளக்கம் அளிக்க ஏன் எங்களுக்கு அவகாசம் அளிக்கபபடவில்லை? அப்படியே இருந்தாலும் அது நாங்கள் திருமணத்தினை அறிவித்த பிறகுதான் அவர்களுக்குத் தெரிய வந்ததா?

இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர் இருவரும், 'எந்த முறையில் பார்த்தாலும் நாங்கள் திருமணம் செய்து கொண்டது என்பது சரியான ஒன்றுதான்; நாங்கள் எந்த விதமான குற்றமோ, பாவமோ செய்துவிடவில்லை. ஆனால் இந்த நடவடிக்கையின் மூலமாக பள்ளி நிர்வாகம் எங்களது நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளது' என்று கூட்டாக வருத்தத்தினைப் பகிர்ந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com