தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் மோடி-மன்மோகன் சந்திப்பு

தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் நேருக்கு நேர் சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
தில்லியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தின நிகழ்ச்சியில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டபோது 'வணக்கம்' தெரிவித்துக் கொண்ட பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். நாள்: புதன்கிழமை.
தில்லியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தின நிகழ்ச்சியில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டபோது 'வணக்கம்' தெரிவித்துக் கொண்ட பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். நாள்: புதன்கிழமை.

தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் நேருக்கு நேர் சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
கடந்த சில தினங்களாக, இருவருக்கும் இடையே கடுமையான சொற்போர் நீடித்து வந்த நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
தில்லி நாடாளுமன்ற வளாகத்துக்குள் கடந்த 2001-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 13-ஆம் தேதி, 5 பயங்கரவாதிகள் ஊடுருவி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில், தில்லி போலீஸார், சிஆர்பிஎஃப் பெண் அதிகாரி, காவலர்கள், தோட்டத் தொழிலாளி, புகைப்படக்காரர் என 11 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மன்மோகன் சிங், எதிரில் வந்த பிரதமர் மோடியைப் பார்த்து "வணக்கம்' சொன்னார். உடனே, அவர், மன்மோகன் சிங்கின் கையைப் பற்றிக் கொண்டு பதிலுக்கு "வணக்கம்' சொன்னார்.
கடந்த சில தினங்களாக, இருவருக்கும் இடையே கடுமையான சொற்போர் நீடித்து வந்த நிலையில், இந்தச் சந்திப்பு இருவருக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.
குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது மோடி பேசுகையில், குஜராத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக, பாகிஸ்தானுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி சதித் திட்டம் தீட்டியுள்ளது என்று குற்றம் சாட்டினார். 
மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் வீட்டில் நடைபெற்ற சதி ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் தூதர் ஆகியோர் கலந்து கொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்தது. 
மேலும், மோடியின் குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்த மன்மோகன் சிங், பிரதமர் மோடி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், பதவிக்கு உரிய பக்குவத்துடன் மோடி நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், தனது தணியாத பேராசையால், அபாயகரமான முன்னுதாரணத்தை மோடி உருவாக்குகிறார் என்றும் மன்மோகன் சிங் கூறினார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர். நிகழ்ச்சிக்கு வந்த ராகுல் காந்தியும், மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், ரவிசங்கர் பிரசாத் மற்றும் பாஜக தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில், குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு, பிரதமர், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், மன்மோகன் சிங், பாஜக மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com