வெரிசோன் நிறுவனத்தில் பணிக் குறைப்பு: ஆயிரக்கணக்கானோர் பணி இழக்கும் அபாயம்

அமெரிக்க தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மூலதனத்தில் இயங்கும் வெரிசோன் டேட்டா சர்வீஸ் இந்தியா பணிக்குறைப்பு நடவடிக்கையில் இறங்க உள்ளது.
வெரிசோன் நிறுவனத்தில் பணிக் குறைப்பு: ஆயிரக்கணக்கானோர் பணி இழக்கும் அபாயம்


சென்னை: அமெரிக்க தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மூலதனத்தில் இயங்கும் வெரிசோன் டேட்டா சர்வீஸ் இந்தியா பணிக்குறைப்பு நடவடிக்கையில் இறங்க உள்ளது.

இதனால், சென்னை மற்றும் ஹைதராபாத்தில் இயங்கும் இந்நிறுவனங்களில் மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், ஊழியர்கள் மற்றும் ஊழியர்களின் சங்கங்கள் தரப்பில் சுமார் 1,250 பேர் பணியிழப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள ஹை-டெக் சிட்டியில் அமைந்திருக்கும் நிறுவனக் கிளையில் இருந்து 250 பொறியாளர்கள் வேலை இழப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் சுமார் ஆயிரம் பேர் வேலை இழப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள், தாங்கள் பாதுகாவலர்கள் மூலம் மிரட்டப்படுவதாகவும், வேலையை தாமாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

சர்வதேச சந்தையில் தொழில்நுட்ப மாறுதலுக்கு ஏற்ற வகையில் சில பணிகள் முற்றிலும் நீக்கப்படுகின்றன. சில பணிகளுக்கு எதிர்காலத்தில் எந்த வாய்ப்புமே இல்லை என்பது தெரிய வந்துள்ளது என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com