முத்தலாக் வரைவுத் திட்ட மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்! 

முத்தலாக் முறையை சட்ட விரோதமாக அறிவிக்கும் வரைவுத் திட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
முத்தலாக் வரைவுத் திட்ட மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்! 

புதுதில்லி: முத்தலாக் முறையை சட்ட விரோதமாக அறிவிக்கும் வரைவுத் திட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை அன்று ஒப்புதல் அளித்துள்ளது

இஸ்லாமிய பெண்களை திருமண உறவிலிருந்து உடனடியாக விவாகரத்து செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக உச்ச நீதின்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பில் முத்தலாக் முறையை நீக்க உரிய சட்டம் கொண்டு வரும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது

இதன் தொடர்ச்சியாக முத்தலாக் முறைக்கு எதிராக தனிச் சட்டம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் முத்தலாக் முறையை சட்ட விரோதமாக அறிவிக்கும் வரைவுத் திட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை அன்று ஒப்புதல் அளித்துள்ளது

'இஸ்லாமிய பெண்களின் திருமண உரிமை பாதுகாப்புச் சட்டம்' என்று பெயரிடப்பட்டுள்ள இச்சட்ட விதிகளின் படி, இஸ்லாமிய பெண்களுக்கு உடனடியாக மூன்று முறை தலாக் சொல்வது சட்ட விரோதம் என்றும், செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு மசோதாவானது உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அமைந்த மத்திய அமைச்சர்கள் குழு ஒன்றினால் உருவாக்கப்பட்டதாகும். இந்த குழுவில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, சட்ட அமைச்சர் ரவிஷங்கர்  பிரசாத் மற்றும் சட்டத்துறை இணையமைச்சர் சவுத்ரிஆகியோர் பங்கேற்றனர்.

இந்த சட்டத்தின் மூலம் முத்தலாக் மூலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் தனக்கு நியாயம் கேட்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் அவளுக்கும் அவரைச் சார்ந்துள்ள குழந்தைகளுக்கும் போதுமான ஜீவனாம்சம் கேட்க இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com