அடுத்த 5 ஆண்டுகளில் 38,000 கி.மீ. ரயில் பாதையை மின்னணுமயமாக்க முடிவு

அடுத்த 5 ஆண்டுகளில் 38,000 கி.மீ. தொலைவு ரயில் பாதையை மின்னணுமயமாக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரயில்வேயின் எரிபொருள் செலவு கணிசமாகக் குறையும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 38,000 கி.மீ. ரயில் பாதையை மின்னணுமயமாக்க முடிவு

அடுத்த 5 ஆண்டுகளில் 38,000 கி.மீ. தொலைவு ரயில் பாதையை மின்னணுமயமாக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரயில்வேயின் எரிபொருள் செலவு கணிசமாகக் குறையும்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் ரயில்வே இணையமைச்சர் ராஜேன் கோஹைன் வெள்ளிக்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
இப்போது நமது நாட்டில் 42 சதவீத ரயில்வே ரயில் பாதைகள் மின்னணுமயமாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்களில் டீசல் என்ஜின்கள் மூலம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. நடப்பு நிதியாண்டில் 4,000 தொலைவும், அடுத்த நிதியாண்டில் 6,000 கி.மீ. தொலைவும் மின்னணுமயமாக்கப்படவுள்ளன. அதற்கு அடுத்து வரும் நிதியாண்டுகளில் முறையே 7,000 கி.மீ. மற்றும் 10,500 கி.மீ. தொலைவு ரயில் பாதை மின்னணுமயமாக்கப்படவுள்ளது.
இதில் அதிகபட்சமாக ராஜஸ்தானில் 1991 கி.மீ. தொலைவுக்கு ரயில்வே பாதைகள் மின்னணுமயமாகின்றன. அதற்கு அடுத்த இடங்களில் அஸ்ஸாம் (1,448 கி.மீ.), உத்தரப் பிரதேசம் (1,308 கி.மீ.), குஜராத் (1088 கி.மீ.) ஆகியவை உள்ளன.
ரயில்வேயில் இப்போது எரிபொருள் செலவு ரூ.32,000 கோடியாக உள்ளது. இதில் டீசலுக்கு மட்டும் 20,000 கோடி செலவாகிறது. முழுவதும் மின்னணுமயமானால் இந்தச் செலவு ரூ.10,000 கோடியாகக் குறையும். நிர்பயா நிதி மூலம் 983 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட இருக்கின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த 2012 டிசம்பரில் மருத்துவ மாணவி நிர்பயா, ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி உயிரிழந்தார். இதையடுத்து, பெண்களின் பாதுகாப்புக்காக அவரது பெயரில் 2013-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் நிர்பயா நிதி ஒதுக்கப்பட்டது. இதில் ரயில்வேயில் பெண்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்த ரூ.500 கோடி அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com