டெபிட் கார்டு பரிவர்த்தனையை அதிகரிக்க மத்திய அரசு புதிய சலுகை

பொருள்கள் விற்பனையில் டெபிட் கார்டு, பீம் யுபிஐ வாயிலான பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், புதிய சலுகையை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெபிட் கார்டு பரிவர்த்தனையை அதிகரிக்க மத்திய அரசு புதிய சலுகை

பொருள்கள் விற்பனையில் டெபிட் கார்டு, பீம் யுபிஐ வாயிலான பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், புதிய சலுகையை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு, வங்கிகளுக்கான எம்டிஆர் கட்டணத்தை வர்த்தகர்கள் செலுத்த வேண்டியதில்லை; அதனை, அரசே ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொருள்கள் விற்பனையின்போது, டெபிட், கிரெடிட் கார்டு, பீம் யுபிஐ உள்ளிட்ட மின்னணு பரிவர்த்தனை சேவையை வழங்குவதற்காக வர்த்தகர்களிடம் வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. இக்கட்டணம், எம்டிஆர் என்றழைக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட அறிவிக்கையின்படி, ரூ.20 லட்சம் வரை ஆண்டு விற்றுமுதல் கொண்ட சிறிய வர்த்தகர்களுக்கு எம்டிஆர் கட்டணம் 0.40 சதவீதமாகவும், ரூ.20 லட்சத்துக்கு அதிகமான ஆண்டு விற்றுமுதல் கொண்ட வர்த்தகர்களுக்கு 0.90 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பைவிட, வர்த்தகர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், பொருள்கள் வர்த்தகத்தில் டெபிட் கார்டு, பீம் யுபிஐ பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் புதிய சலுகையை வழங்குவதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளுக்கான எம்டிஆர் கட்டணத்தை வர்த்தகர்கள் செலுத்த வேண்டியதில்லை; அதனை, அரசே ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இச்சலுகையை வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com