நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே அரசியலுக்கு வந்தேன்: ராகுல் காந்தி

நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே அரசியலுக்கு வந்தேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே அரசியலுக்கு வந்தேன்: ராகுல் காந்தி

நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே அரசியலுக்கு வந்தேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் 87ஆவது தலைவராக ராகுல் காந்தி இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, மூத்த காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் பங்கேற்றனர். 

காங்கிரஸ் காட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின் ராகுல்காந்தி பேசியதாவது, 
நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே அரசியலுக்கு வந்தேன். 13 ஆண்டுகளுக்கு முன் அரசியலைத் தொடங்கினேன். பாஜக அரசு நாட்டை பின்னோக்கி கொண்டு சென்றது. காங்கிரஸ் கட்சி நாட்டை 21 ஆம் நூற்றாண்டுக்கு கொண்டு சென்றது. 

நாட்டிற்கான அனைத்து முடிவுகளையும் ஒருவரே எடுக்கிறார். இன்று மக்கள் மாற்று காருத்துகளை சொல்ல முடிவதில்லை. தற்போதைய ஆட்சியாளர்கள் தங்கள் பலத்தால்தான் வெற்றிபெறுகிறார்கள் நன்மை செய்து வெற்றியடையவில்லை. அரசியல் என்பது மக்களுக்கானது, தற்போது அரசியல் மக்களுக்காக பயன்படுத்தப்படுவதில்லை. பாஜக மக்களவை பிளவுபடுத்துகிறது. நாங்கள் சேர்க்கிறோம். 

காங்கிரஸ் கட்சியே எனது குடும்பம். வருங்காலத்தில் இந்தியாவை நாங்கள் வளப்படுத்துவோம். ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரையும் காப்பதை எனது கடமையாக நினைக்கிறேன். அனைவரையும் அன்பால் ஒன்றிணைக்க காங்கிரஸ் முயற்சிக்கும். 

பாஜகவுடன் வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களையும் எங்கள் சகோதரர்களாகவே நினைக்கிறோம். மக்கள் குரலை அவர்கள் நசுக்கிறார்கள். மக்களின் குரலை நாங்கள் வெளிப்படுதுகிறோம். வெறுப்பை நாங்கள் வெறுப்பால் எதிர்கொள்வதில்லை, அன்பால் எதிர்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com