குஜராத்தில் 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு

குஜராத் மாநிலத்தில் 4 பேரவைத் தொகுதிகளில் அடங்கிய 6 வாக்குச் சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை (டிச.17) மறு வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

குஜராத் மாநிலத்தில் 4 பேரவைத் தொகுதிகளில் அடங்கிய 6 வாக்குச் சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை (டிச.17) மறு வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
குஜராத் மாநில சட்டப் பேரவைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. முதல்கட்டமாக 89 தொகுதிகளில் கடந்த 9-ஆம் தேதியும், இரண்டாவது கட்டமாக 93 தொகுதிகளில் கடந்த 14-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தம் 68.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை 18-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. 
வாக்கு எண்ணிக்கையின்போது, ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் ஒரு வாக்குச்சாவடி தேர்வு செய்யப்பட்டு, அங்கு பதிவான வாக்குகளுடன், வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட உள்ளது.
இந்நிலையில், விராம்கம், சாவ்லி ஆகிய தொகுதிகளில் தலா 2 வாக்குச் சாவடிகள், வட்கம், தஸ்க்ராய் ஆகிய தொகுதிகளில் தலா ஒரு வாக்குச் சாவடி என மொத்தம் 6 வாக்குச்சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை மறு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்தது. எனினும், இந்த வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு ஏன் நடத்தப்படுகிறது? என்பதற்கான காரணத்தை தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை.
மேற்கண்ட 4 தொகுதிகளில், வட்கம் தொகுதியில் தலித் சமூகத் தலைவரான ஜிக்னேஷ் மேவானி சுயேச்சையாக களத்தில் உள்ளார். இத்தேர்தலில் பாஜகவுக்கு எதிராக உருவான படேல் உள்ளிட்ட மூன்று சமூகத் தலைவர்களில் ஜிக்னேஷும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com