புரி ஜெகந்நாதர் ஆலய கருவறைக்குள் நுழைய பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்: ஒடிஸா அரசு

ஒடிஸா மாநிலம், புரியிலுள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில் கருவறைக்குள் செல்ல விவிஐபிக்கள் உள்ளிட்ட அனைத்து பக்தர்களுக்கும் அந்த மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
புரி ஜெகந்நாதர் ஆலய கருவறைக்குள் நுழைய பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்: ஒடிஸா அரசு

ஒடிஸா மாநிலம், புரியிலுள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில் கருவறைக்குள் செல்ல விவிஐபிக்கள் உள்ளிட்ட அனைத்து பக்தர்களுக்கும் அந்த மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
புரி ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆணையம், மாநில சட்ட அமைச்சகத்துக்கு சில பரிந்துரைகளை அளித்திருந்தது. அதன்படி, கோயில் நிர்வாகத்துக்கு மாநில சட்ட அமைச்சகம் கடிதம் மூலம் சில அறிவுரைகளை அனுப்பியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
விவிஐபிக்கள் உள்ளிட்ட பக்தர்கள், கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு மரத்தாலான தடுப்பு வரையில் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அர்ச்சகர்கள் தவிர, கருவறைக்குள் செல்ல வேறு யாரையும் அனுமதிக்கக் கூடாது. கருவறைக்குள் பக்தர்கள் சென்று பரமாணிக் தரிசனம், சஹானா மேளா தரிசனம் ஆகியவற்றை மேற்கொள்வதை நிறுத்த வேண்டும். இந்த உத்தரவை மீறுவோருக்கு அதிக அளவில் அபராதத் தொகை விதிக்கப்பட வேண்டும்.
புரி ஜெகந்நாதர் கோயில் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் ஒடிஸா மாநில சட்ட அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, புரி ஜெகந்நாதர் கோயில் விவகாரங்கள் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி பி.பி. தாஸ் தலைமையிலான குழு, அந்த மாநில அரசிடம் ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில் புரி ஜெகந்நாதர் கோயில் செயல்பாடுகளை சீர்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை அளித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com