ஹிமாச்சலப் பிரதேச பாஜக முதல்வர் வேட்பாளர் பிரேம் குமார் துமால் தோல்வி

ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளர் பிரேம் குமார் துமால் தோல்வியடைந்தார்.
ஹிமாச்சலப் பிரதேச பாஜக முதல்வர் வேட்பாளர் பிரேம் குமார் துமால் தோல்வி

68 உறுப்பினர்களைக் கொண்ட ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற்று வருகிறது.

இங்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பை பாஜக பெற்றுள்ளது. சமீபத்திய நிலவரப்படி பாஜக 32 இடங்களில் வெற்றியும், 12 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது.

இதன்மூலம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இங்கு ஆளும் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. மேலும் 4 இடங்களில் முன்னிலையுடன் தோல்வியைச் சந்தித்தது.

இந்நிலையில், பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரேம் குமார் துமால், தோல்வியைத் தழுவினார். 

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சுஜான்பூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக முதல்வர் வேட்பாளர் பிரேம் குமார் துமால், காங்கிரஸ் வேட்பாளர் ராஜிந்தர் ராணாவிடம் 3,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com