தோல்வி பற்றிக் கவலைப்படாமல் களத்தில் நின்றவர்: ராகுலை வாயாரப் புகழும் பாஜகவின் கூட்டணிக்கட்சி!

தோல்வி பற்றிக் கவலைப்படாமல் களத்தில் நின்றவர் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியினை பாரதிய ஜனதாவின் கூட்டணிக்கட்சியான சிவசேனா வாயாரப் புகழ்ந்துள்ளது.
தோல்வி பற்றிக் கவலைப்படாமல் களத்தில் நின்றவர்: ராகுலை வாயாரப் புகழும் பாஜகவின் கூட்டணிக்கட்சி!

மும்பை: தோல்வி பற்றிக் கவலைப்படாமல் களத்தில் நின்றவர் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியினை பாரதிய ஜனதாவின் கூட்டணிக்கட்சியான சிவசேனா வாயாரப் புகழ்ந்துள்ளது.

மஹாராஷ்டிராவில் ஆளும் பாரதிய ஜனதாவின் கூட்டணிக்கட்சியாக இருப்பது சிவசேனா கட்சி. கூட்டணியில் இருந்தாலும் இரு கட்சிகளுக்கு இடையே தற்பொழுது சுமுகமான உறவு இல்லை. அவ்வப்பொழுது ஏதாவது ஒரு விஷயத்தி ல் இரு கட்சிகளும் உரசிக் கொள்வது வழக்கம்.

இந்நிலையில்தான் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான 'சாம்னாவில்' வெளிவந்துள்ள தலையங்கப் பகுதியில் ராகுல் குறித்து இவ்வாறு கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒரு நெருக்கடியான காலகட்டத்தில காங்கிரஸ் கட்சியின் தலைமைப்பொறுப்பை ராகுல் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவரை வாழ்த்துவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

காங்கிரசை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வதா அல்லது தோல்விப் படுகுழியில் விழ வைப்பதா என்பதை அவரே முடிவு செய்யட்டும்.

பாஜகவின் பெரிய தலைவர்கள் எல்லாம் கூட தோல்வி பயத்திலிருந்து பொழுது தோல்வி பற்றிக் கவலைப்படாமல் களத்தில் நின்றவர் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இந்த தன்னம்பிக்கைதான் ராகுலை முன்னேற்றும்.

கடந்த 60 வருடங்களாக நாட்டில் ஒரு வளர்ச்சியும் இல்லை என்றும், உண்டாகியிருக்கும் வளர்ச்சிகள் எல்லாமே கடந்த மூன்று வருடங்களில்தான் நடந்துள்ளது என்று நினைப்பவர்கள் எல்லாம் மனிதர்களா அல்லது முட்டாள்தனத்தின் மறு வடிவங்களா?

யாருக்குத் தெரியும் ஒருவேளை இந்தியா கடந்த ஆண்டில்தான் சுதந்திரம் பெற்றது; அதற்கு முன்பாக 150 வருடங்கள் சுதந்திர போராட்டம் நடைபெற்றது என்பதே பொய் என்றுகூட வரலாறுகள் முன்வைக்கபபடலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com