இந்தியாவில் வாழும் அனைவரும் ஹிந்துக்களே!: மோகன் பாகவத்

இந்தியாவில் வசிக்கும் அனைவரும் ஹிந்துக்கள்தான் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறினார்.
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் ஆர்எஸ்எஸ் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் பங்கேற்று வழிபாடு நடத்திய அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்.
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் ஆர்எஸ்எஸ் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் பங்கேற்று வழிபாடு நடத்திய அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்.

இந்தியாவில் வசிக்கும் அனைவரும் ஹிந்துக்கள்தான் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறினார்.
ஆர்எஸ்எஸ்-இன் அமைப்பு ரீதியான பணிகளை ஆய்வு செய்வதற்காக, 5 நாள் பயணமாக அவர், திரிபுரா மாநிலத்துக்கு வந்துள்ளார். தலைநகர் அகர்தலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
ஹிந்துத்துவம் என்பது, ஹிந்து மதத்தில் இருந்து வேறுபட்டது. நமக்கு யாருடனும் பகை கிடையாது. அனைவரும் வளம் பெற வேண்டும் என்றே விரும்புகிறோம். அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே ஹிந்துத்துவத்தின் பொருளாகும். இந்தியாவில் வாழும் முஸ்லிம்களும், ஹிந்துக்கள்தான். 
இந்தியா, ஹிந்துக்களுக்கான தேசமாகும். உலகின் பல்வேறு பகுதிகளில் கொடுமைகளை அனுபவித்த ஹிந்துக்கள், அடைக்கலம் தேடி இந்தியாவுக்கு 
வருகிறார்கள்.
1947-ஆம் ஆண்டில், இந்தியா பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. அதனால், ஹிந்துத்துவத்தின் சாரம் பலவீனம் அடைந்தது; ஹிந்து சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்தது.
அதற்கு முன், இந்தியா ஒருங்கிணைந்த நாடாக பல ஆண்டுகள் இருந்தது. அப்போது, ஹிந்துக்களிடையே ஒற்றுமை நிலவி வந்தது.
இறை நம்பிக்கை கொண்டவர்களும், இறை மறுப்புக் கொள்கை உடையவர்களும் ஒருசேர எப்படி இந்தியாவில் வாழ்கிறார்கள்? என்பதை உலக நாடுகள் குழப்பத்துடன் பார்க்கின்றன.
ஹிந்துக்கள் உண்மை மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த உலகம், வலிமைக்கு மதிப்பளிக்கிறது. எனவே, நாம் அமைப்பாக இருப்பதே நமக்கு வலிமையைக் கொடுக்கும். எனவே, ஹிந்துக்கள் அமைப்பு ரீதியாக பயிற்சி பெற வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com