கூடங்குளம், கங்கை தூய்மை திட்டம்: நாடாளுமன்றத்தில் விரைவில் சிஏஜி அறிக்கை தாக்கல்

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், கூடங்குளம் அணுமின் நிலையம், ரயில்வே பயோ-டாய்லெட், கங்கை புனரமைப்புத் திட்டம் ஆகியவை குறித்து மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) தனது அறிக்கையை தாக்கல்

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், கூடங்குளம் அணுமின் நிலையம், ரயில்வே பயோ-டாய்லெட், கங்கை புனரமைப்புத் திட்டம் ஆகியவை குறித்து மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக, மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் 11 முதல் 12 அறிக்கைகள் வரை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில், கங்கை நதி புனரமைப்புத் திட்டம், ரயில்களில் பயோ-டாய்லெட்களின் பயன்பாடு, கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவை குறித்து அறிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன.
இவை தவிர, கலால் மற்றும் சுங்க வரி உள்பட மத்திய நிதியமைச்சகம் தொடர்பாகவும் 4 அல்லது 5 அறிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன என்றார் அவர்.
கங்கை நதியைத் தூய்மைப் படுத்துவதற்காக, மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு ஒரு கனவுத் திட்டத்தைக் கொண்டு வந்தது. அந்தத் திட்டத்துக்காக, ரூ. 20,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தத் திட்டப் பணிகளின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
ரயில்களில் அமைக்கப்பட்டுள்ள பயோ-டாய்லெட் பயன்பாடு குறித்த அறிக்கை, நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று சிஏஜி அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்ட மற்றொரு அதிகாரி ஒருவர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், "ரயில்களில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத கழிப்பறைகளின் (பயோ-டாய்லெட்) நிலை குறித்த தகவல்களும், பரிந்துரைகளும் அந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கும்' என்றார்.
ரயில்களிலும், ரயில் நிலைய வளாகங்களிலும் தூய்மையைப் பேணுவதற்காக, பயோ-டாய்லெட்களை அமைக்கும் பணியை ரயில்வே துறை தொடங்கியுள்ளது. அதற்காக, அனைத்து பயணிகள் ரயில்களிலும், வரும் 2019-ஆம் ஆண்டுக்குள் பயோ-டாய்லெட்களை அமைப்பதற்கு ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை, ரயில்களில் 49,000 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com