வயதான தலைவர்களுக்கு ஓய்வு அளிக்க மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் முடிவு

அதிக வயதான மற்றும் உடல்நிலை ஒத்துழைக்காத தலைவர்களுக்கு ஓய்வு அளிக்க மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் முடிவு செய்துள்ளனர்.

அதிக வயதான மற்றும் உடல்நிலை ஒத்துழைக்காத தலைவர்களுக்கு ஓய்வு அளிக்க மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் முடிவு செய்துள்ளனர்.
அமைப்புக்குப் புத்துணர்வு அளிக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவோயிஸ்ட் அமைப்பின் மையக் கூழு இயற்றிய தீர்மானத்தின் நகல், அமைப்பு வட்டாரத்துக்குள் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானத்தில், இயக்கப் பொறுப்பை வகிக்கும் தலைவர்கள், அந்தப் பதவியில் தொடர்ந்து நீடித்திருப்பதை நியாயப்படுத்த முடியவில்லை என்றால், அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவோயிஸ்ட் இயக்கத்தின் நலனைக் கருதி, மூத்த தலைவர்களின் சம்மதத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்கத்துக்குப் புத்துணர்ச்சி அளிப்பதற்காக மட்டுமல்லாமல், மத்திய மற்றும் மாநில அரசுப் படைகளிடமிருந்து வயது முதிர்ந்த தலைவர்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்தச் சுற்றறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மாவோயிஸ்ட் அமைப்பின் பெரும்பாலான தலைவர்கள் 60 வயதைத் தாண்டியவர்களாக உள்ள நிலையில், ஓய்வு அளிக்கப்படுவதற்கான வயது வரம்பு எதுவும் அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. அந்த அமைப்பின் பொதுச் செயலர் முப்பால லக்ஷ்மண் ராவுக்கு 67 வயதாகிறது. கிழக்கு மண்டலத்துக்கான கட்சியின் தலைவர் பிரசாந்த் போஸýக்கு 72 வயதும், படைப் பிரிவுத் தலைவர் வாசவராஜுக்கு 62 வயதும் ஆகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com