காங்கிரஸ் அமளியால் சச்சின் டெண்டுல்கரின் 'கன்னிப் பேச்சு' க்ளீன் போல்ட்!

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் ஏற்படுத்திய அமளி காரணமாக சச்சின் டெண்டுல்கர் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
காங்கிரஸ் அமளியால் சச்சின் டெண்டுல்கரின் 'கன்னிப் பேச்சு' க்ளீன் போல்ட்!

கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர், 2012-ம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தின் நியமன உறுப்பினராக உள்ளார். நாடாளுமன்றத்தில் இவரின் செயல்பாடு மற்றும் வருகைப்பதிவு ஆகியன அவ்வப்போது விமர்சனத்துக்குள்ளாகும். 

இதனால் நாடாளுமன்றத்தில் சச்சின் டெண்டுல்கரின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. மேலும் அவரது உறுப்பினர் பதவியின் நிலை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் கன்னிப் பேச்சு காங்கிரஸ் கட்சியின் அமளி காரணமாக வியாழக்கிழமை தடைப்பட்டது.

சச்சின், தன்மீது இருக்கும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தியாவில் விளையாட்டின் எதிர்காலம் குறித்த தனது கன்னி உரையை தயார் செய்திருந்தார்.

ஆனால், குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீதான பிரதமர் நரேந்திர மோடியின் விமர்சனம் காரணமாக காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டது.

குடியரசுத் துணைத்தலைவரும், அவைத்தலைவருமான வெங்கய்ய நாயுடு, காங்கிரஸ் கட்சியின் அமளியை கட்டுப்படுத்த முயன்றார். இருப்பினும் தொடர்ந்து கூச்சல், குழப்பம் நிலவியதால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

இந்த சூழ்நிலையில், செய்வதறியாது அமைதியாக நின்றிருந்த சச்சின் டெண்டுல்கருக்கு தனது கன்னி உரையை பேச முடியாமல் போனது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com