ஏழு வருடங்களாக ஒரு உருப்படியான சாட்சிக்காகக் காத்திருந்தேன்: நீதிபதி ஓ.பி.சைனி!

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு விசாரணையில் ஏழு வருடங்களாக ஒரு உருப்படியான சாட்சிக்காகக் காத்திருந்தேன் என்று சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார்.
ஏழு வருடங்களாக ஒரு உருப்படியான சாட்சிக்காகக் காத்திருந்தேன்: நீதிபதி ஓ.பி.சைனி!

புதுதில்லி: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு விசாரணையில் ஏழு  வருடங்களாக ஒரு உருப்படியான சாட்சிக்காக காத்திருந்தேன் என்று சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார்.

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட 18 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து தில்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார். 1552 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:

கடந்த ஏழு வருடங்களாக கோடை விடுமுறை உள்ளிட்ட நீதிமன்றத்தின் எல்லா வேலை நாட்களிலும், நீதிமன்ற அறையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் பொறுமையாகக் காத்திருந்தேன்.  இவ்வழக்கில் யாரவது ஒருவராவது நீதிமன்றத்தால் ஏறுக்கொள்ளப்படக் கூடிய ஒரு சாட்சியோடு வருவார்களென்று; ஆனால் எதுவும் நடக்கவில்லை.

இதன்மூலம் அனைவரும் வெளியே மக்களிடையே வதந்தி கிசுகிசு மற்றும் ஊகங்களின் மூலம் பேசப்படும் கருத்துக்களையே நம்புவதாகத் தெரிகிறது. அதே சமயம் இத்தகைய பொதுமக்கள் எண்ணங்களுக்கு நீதிமன்ற விசாரணையில் இடம் இல்லை.

இந்த வழக்கு விசாரணை அதிக கவனத்தினை ஈர்த்த காரணத்தால் விசாரணை நடைபெறும் நாட்களில் நீதிமன்ற அறை நிரம்பி வழியும்.

சிலர் நீதிமன்றத்தில் ஆஜராகி இந்த வழக்கில் சில உண்மைகள் நீதிமன்றத்தில் மறைக்கப்பட்டுள்ளாக  கூறுவார்கள்.ஆனால் அது தொடர்பாக உங்களிடம் ஏதாவது உறுதியான ஆதாரம் உள்ளதா என்று கேட்டால், அப்படியே விலகி விடுவார்கள்.   அப்படி யாரேனும் ஏதாவது முன்வந்து எழுத்துப்பூர்வ மனுக்கள் தாக்கல் செய்தாலும், அவர்கள் சமர்ப்பிக்கும் ஆதாரங்கள் பொருத்தமாக இருக்காது.

இந்த வழக்கு விசாரணையில் முதலில் ஆர்வமாகத் துவங்கிய அரசுத் தரப்பு வாதமானது நாளடைவில் மிகுந்த எச்சரிக்கை உணர்வு கொண்டதாகவும், எதைச் செய்ய வேண்டும் என்ற நிலையிலும் மாற்றம் உண்டானது கொஞ்சம் கொஞ்சமாகச் சீர்குலைந்த வாதத்தின் தரமானது ஒரு கால கட்டத்தில் இலக்கற்ற ஒன்றாக மாறி விட்டது.

முக்கியமாக அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்படும் மனுக்களில் உரிய விசாரணை அதிகாரிகள் அல்லது வழக்கறிஞர் கையெழுத்திடுவது இல்லை. வலியுறுத்திச் சொல்லியும் அவர்கள் அக்கறை காட்டவில்லை.  யாருமே கையெழுத்திடாத ஒரு ஆவணத்தால் நீதி விசாரணையில் என்ன பயன்?

இவ்வாறு நீதிபதி ஓ.பி.சைனி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com