உத்தரப் பிரதேசத்தில் 298 மதரசா ஊழியர்களின் சம்பளம் நிறுத்தி வைப்பு! 

உத்தரப் பிரதேசத்தில் அரசு கேட்டுக் கொண்ட விஷயங்களை அளிக்காத 298 மதரசா ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் 298 மதரசா ஊழியர்களின் சம்பளம் நிறுத்தி வைப்பு! 

லக்னௌ: உத்தரப் பிரதேசத்தில் அரசு கேட்டுக் கொண்ட விஷயங்களை அளிக்காத 298 மதரசா ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் இயங்கும் மதரசாக்கள் தங்களது பள்ளி இயங்கும் நிலம் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டுமென சில மாதங்களுக்கு முன்பு மாநில அரசு சார்பில் சுற்றறிக்கை விடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்பொழுது விபரங்களை சரியாக வழங்காத 43 மதரசாக்களைச் சேர்ந்த 298 மதரசா ஊழியர்களின் சம்பளத்தினை நிறுத்தி வைத்து மாநில அரசு உத்தரவைத்துள்ளது.

இது தொடர்பாக சிறுபான்மையினர் நலம் மற்றும் வக்ப் வாரிய அமைச்சரான லஷ்மி நாராயண் சவுத்ரி இன்று சட்டப்பேரவையில் தெரிவித்ததாவது:

மாநிலம் முழுவதும் மொத்தம் 560 மதரசாக்கள் உள்ளன. இவற்றில் 8764 ஆசிரியப் பணியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்ளனர். அரசின் சுற்றறிக்கையினை ஏற்று 517 மதரசாக்கள் தங்களது விபரங்களை சமர்ப்பித்துள்ளன.மீதமுள்ள 43 மதரசாக்களைச் சேர்ந்த 298  ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்து மாநில அரசு தற்பொழுது உத்தரவிட்டுள்ளது.    

இந்த மதரசாக்களும் விரைவில் மீண்டும் தங்களது தகவல்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com