ஜிஎஸ்டியின் விளைவு: ரயில்வே உணவுகளின் விலை 'விர்'!

மத்திய அரசின் புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் ரயில்வே நிலையங்களிலும், ரயிலிலும் வழங்கப்படும் உணவுபொருட்களின் விலை விரைவில் உயரவுள்ளது.
ஜிஎஸ்டியின் விளைவு: ரயில்வே உணவுகளின் விலை 'விர்'!

புதுதில்லி: மத்திய அரசின் புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் ரயில்வே நிலையங்களிலும், ரயிலிலும் வழங்கப்படும் உணவுபொருட்களின் விலை விரைவில் உயரவுள்ளது.

ரயில் பயணிகளுக்காக ரயில் நிலையங்களிலும், ரயிலிலும் உணவு வழங்கப்படுகிறது. இதற்கென உள்ள ஒப்பந்ததாரராகள் உணவு சப்ளைக்கு ஏலம் எடுத்து இதனை நடத்தி வருகிறார்கள். இந்த ஒப்பந்தங்களை  ரயில்வே, சுற்றுலா மற்றும் கேட்டரிங் துறை கண்காணிக்கிறது.

ரயில் உணவுகள் என்ன விலையில், என்ன அளவில் இருக்க வேண்டும் என்பதை இத்துறைதான் முடிவு செய்கிறது. கடைசியாக 2012-ம் ஆண்டு உணவு விலை பட்டியல் தயாரிக்கப்பட்டு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. தற்பொழுது மீண்டும் விலையை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளனர்.

கடந்த ஜுலையில் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் படி ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவுகளுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரயிலில் வழங்கப்படும் உணவுகளுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி கொண்டு வரப்பட்டுள்ளது.

அதனுடன் ரயில்வே உணவு காண்டிராக்டர்கள் பயன்படுத்தும் பல்வேறு உணவு மூலப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி தனியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விலையை மாற்றி அமைக்க வேண்டும் என்று அவர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஆதாரமாகக் கொண்டு ஆய்வு செய்து புதிய விலை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் உணவுப்பொருட்கள் அனைத்துமே விலை உயர உள்ளது.

இந்த விலை உயர்வு பரிந்துரை பட்டியலானது சம்பந்தமாக ரயில்வே கேட்டரிங் துறை ரெயில்வேயின் பல்வேறு நிதி சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் விலை உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com