இனி ஃபேஸ்புக் கணக்கு துவங்கவும் ஆதார் தேவை!

இந்தியாவில் உள்ளவர் இனி புதிய ஃபேஸ்புக் கணக்கு துவங்க ஆதார் தேவைப்படுகிறது.
இனி ஃபேஸ்புக் கணக்கு துவங்கவும் ஆதார் தேவை!

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 217 மில்லியன் நபர்கள் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் 212 மில்லியன் நபர்கள் ஸ்மார்ட்ஃபோன்களில் ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்கள் ஆவர். 

இதுவே உலகளவில் 2.1 பில்லியன் நபர்கள் ஒவ்வொரு மாதமும் ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களாக உள்ளனர்.

இந்நிலையில், இனி வரும் காலங்களில் ஃபேஸ்புக்கில் புதிய கணக்கை துவங்க வேண்டுமென்றால் உங்களிடம் ஆதார் இருக்க வேண்டும். 

இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்திய பிரிவு செய்தித்தொடர்பாளர் தெரிவித்ததாவது:

ஃபேஸ்புக்கில் இனி வரும் காலங்களில் புதிய கணக்கு துவங்க ஆதார் தேவை. அதில் ஆதாரில் உள்ள பெயரை குறிப்பிட்டு இந்த புதிய கணக்கை துவங்கலாம். ஆனால் ஆதார் எண் அளிக்கப்பட வேண்டிய அவசியமில்லை.

இதன்மூலம் அவர்களுக்கு ஃபேஸ்புக்கில் தேவையானதை உடனடியாக ஆய்வு செய்து அளிக்க முடியும். குறிப்பாக அவரது மொழியில் இந்த இயங்குதளம் செயல்படும். மேலும், அவரை தன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எளிதில் அடையாளம் காண முடியும். 

இந்த நடைமுறை கட்டாயமல்ல. இதனை ஒரு பரிசோதனை முயற்சியாகவே செய்துவருகிறோம். அதுபோன்று அனைவரும் தங்களின் சொந்த பெயருடன் கணக்கை துவக்கும் வசதி ஏற்படும் என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com