இந்த புத்தாண்டு 21-ம் நூற்றாண்டின் இளைஞர்களுக்கான ஆண்டு: பிரதமர் நரேந்திர மோடி 

வருகிற புத்தாண்டு 21-ம் நூற்றாண்டின் இளைஞர்களின் ஆண்டாக இருக்குமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்த புத்தாண்டு 21-ம் நூற்றாண்டின் இளைஞர்களுக்கான ஆண்டு: பிரதமர் நரேந்திர மோடி 

பிரதமர் நரேந்திர மோடி, 2017-ம் ஆண்டின் கடைசி மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் டிசம்பர் 31-ந் தேதி, ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டார். அதில் அவர் பேசியதாவது:

இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் உதவிகராமக இருக்கிறது. இதன்மூலம் நான் மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறேன். இதில் அவர்களின் குரல் ஒலிக்கிறது. இந்த புத்தாண்டு 21-ம் நூற்றாண்டின் இளைஞர்களுக்கு இன்றியமையாத ஆண்டாக இருக்கப்போகிறது.

நாளை மிகச் சிறந்த நாளாக அமையப்போகிறது. ஏனென்றால் 21-ம் நூற்றாண்டில் பிறந்த அத்தனை குழந்தைகளுக்கும் தற்போது 18 வயது நிறைவடைகிறது. மேலும் வருகிற ஜூன் மாதம் முதல் அவர்களும் இந்நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றக்கூடிய வாக்காளர்களாக உருவெடுக்கின்றனர்.

நாட்டின் வளர்ச்சியில் வாக்காளர்களின் பங்கு மிக முக்கியமானது. உங்கள் வாக்குதான் எதிர்காலத்தை கட்டமைக்க உதவும். எனவே இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் வறுமை, ஜாதி, மதம், பயங்கரவாதம், ஊழல் ஆகியவற்றை ஒழித்து புதிய இந்தியாவை உருவாக்க பாடுபட வேண்டும். 

ஒவ்வொரு மாவட்டந்தோறும் மாதிரி நாடாளுமன்றங்களை இளைஞர்கள் நடத்திப் பழக வேண்டும். இதன்மூலம் நீங்கள் ஜனநாயகத்தின் குரலை உணர்வீர்கள். உங்கள் வாக்கின் மூலம் நீங்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com