உணவு குறித்து புகார் கூறிய பிஎஸ்எஃப் வீரரின் விருப்ப ஓய்வு நிராகரிப்பு

ராணுவ வீரர்களுக்கு கொடுக்கப்படும் உணவு குறித்து விடியோவில் புகார் கூறியிருந்த பிஎஸ்எஃப் வீரர் தேஜ் பஹதூர் யாதவ்வின் விருப்ப ஓய்வு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
 உணவு குறித்து புகார் கூறிய பிஎஸ்எஃப் வீரரின் விருப்ப ஓய்வு நிராகரிப்பு


புது தில்லி: ராணுவ வீரர்களுக்கு கொடுக்கப்படும் உணவு குறித்து விடியோவில் புகார் கூறியிருந்த பிஎஸ்எஃப் வீரர் தேஜ் பஹதூர் யாதவ்வின் விருப்ப ஓய்வு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ராணுவ வீரர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுவதில்லை என்றும், பல நாள் பசியோடுதான் உறங்கச் செல்வதாகவும் தேஜ் பஹதூர் யாதவ் கூறியிருந்த புகார் விடியோ சமூக தளங்களில் வைரஸ் போல பரவியது.

இந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவரது விருப்ப ஓய்வு மனு நிராகரிக்கப்பட்டதாகவும் அவரது மனைவி ஊடகங்களில் தெரிவித்துள்ளார். ராணுவ  அதிகாரிகள் தன்னை துன்புறுத்துவதாக ராவ் பகதூர் கூறியதாகவும் அவரது மனைவி ஷர்மிளா பகதூர் தெரிவித்தார்.

ஆனால், தேஜ் பகதூர் கைது செய்யப்படவில்லை என்றும், அவரது விருப்ப ஓய்வு மனு நிராகரிக்கப்பட்டது உண்மை என்றும் பிஎஸ்எஃப் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அவரது குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை நிலுவையில் இருப்பதால், அவரது விருப்ப ஓய்வு மனு நிராகரிக்கப்பட்டதாகவும், அவரை யாரும் துன்புறுத்தவில்லை, அவர் மனைவியோடு பேச சுதந்திரம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com