நான் ஒரு கால்பந்து; நடுவர்கள்தான் இல்லை: விஜய் மல்லையா டிவீட்

நான் ஒரு கால்பந்து போல பந்தாடப்படுவதாக, தொழிலதிபரும், தலைமறைவுக் குற்றவாளியுமான விஜய் மல்லையா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
நான் ஒரு கால்பந்து; நடுவர்கள்தான் இல்லை: விஜய் மல்லையா டிவீட்


புது தில்லி: நான் ஒரு கால்பந்து போல பந்தாடப்படுவதாக, தொழிலதிபரும், தலைமறைவுக் குற்றவாளியுமான விஜய் மல்லையா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது, விஜய் மல்லையாவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர் சிதம்பரம் ஆகியோர் உதவி செய்ததாக சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது.

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள விஜய் மல்லையா,  "நான் ஒரு கால்பந்து போல இருக்கிறேன், ஊடகங்கள் பிட்ச் போல செயல்பட்டு மகிழ்கின்றன. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும், முன்னர் ஆண்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் இரண்டு எதிரெதிர் அணிகளாக இருந்து கொண்டு என்னைப் பந்தாடுகின்றன. ஆனால் நடுவர்கள் தான் யாரும் இல்லை" என்று கூறியுள்ளார்.

இதற்கு உதாரணமாக, ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களை சிபிஐ குற்றவாளி என்று கூறி நாடகமாடியது. அவர்களை மிகப்பெரிய சிக்கலில் மாட்டிவிட்டது. ஆனால் இறுதியில் என்ன நடந்தது. நீதி வென்றதா? சிபிஐ வென்றதா? என்றும் தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது மத்தயி அமைச்சகத்தின் கூடுதல் செயலர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில்தான் கிங்பிஷர் நிறுவனத்துக்கு பல்வேறு வங்கிகளும் கடன் வழங்கின. இந்த பரிந்துரை இல்லை எனில், நிச்சயம் அனைத்து கடன்களும் நிராகரிக்கப்பட்டிருக்கும் என்று நேற்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com