பனிப்பொழிவினால் விமான வசதி இல்லை: தாயின் உடலை தோளில் சுமந்து கொண்டு 50 கி.மீ நடந்த ராணுவ வீரர்!

தொடரும் பனிப்பொழிவின் காரணமாக போதிய விமான வசதி கிடைக்காத காரணத்தால் மரணமடைந்த தனது தாயின் உடலை தோள்களில் சுமந்தபடி ராணுவ வீர ஒருவர் 50 கி.மீ நடந்த ...
பனிப்பொழிவினால் விமான வசதி இல்லை: தாயின் உடலை தோளில் சுமந்து கொண்டு 50 கி.மீ நடந்த ராணுவ வீரர்!

ஸ்ரீநகர்: தொடரும் பனிப்பொழிவின் காரணமாக போதிய விமான வசதி கிடைக்காத காரணத்தால் மரணமடைந்த தனது தாயின் உடலை தோள்களில் சுமந்தபடி ராணுவ வீர ஒருவர் 50 கி.மீ நடந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது.

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே உள்ள கர்ணா என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது அப்பாஸ். ராணுவத்தில் பணியாற்றி வரும் இவர் தற்போது பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் பணியில் இருக்கிறார். இவரது தாயார் சகினா பேகம். உடல் நலம் குன்றியிருந்த இவர் கடந்த மாதம் 28-ஆம் தேதி அன்று இருதய கோளாறு பதான்கோட்டில் காரணமாக மரணம் அடைந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அபபாஸ் தனது தாயின் விருப்பப்படி அவரது அடக்கம் சொந்த ஊரான கர்ணாவில்நடைபெற வேண்டுமென்று எண்ணினார். அதனால் மறுநாளே தாயாரின் உடலை பதான்கோட்டில் இருந்து காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில்  உள்ள சவுக்கிபால் என்னும் இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தார். அங்கிருந்து அவரது பூர்வ கிராமமான கருணாவுக்கு செல்வதற்கான வழியானது கடும் பனிப்பொழிவினால் முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்தது.

இதனால் அப்பாஸ் சொந்த ஊரான கர்ணாவுக்கு தன்னுடைய தாயாரின் உடலை எடுத்துச் செல்வதற்கு ஹெலிகாப்டர் ஒன்றை ஏற்பாடு செய்து தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக உடனடியாக அவர்களாலும் ஹெலிகாப்டர் எதுவும் ஏற்பாடு செய்து தர இயலவில்லை. 

இதன் காரணமாக அப்பாஸ் ஐந்து நாட்கள் வரை அங்கே தங்கியிருந்த பொழுது எதுவும் முன்னேற்றம் இல்லை. எனவே தன்னுடைய தாயின் விருப்பதை நிறைவேற்ற அவரது உடலை நடையாகவே தூக்கி செல்லலாம் என்று  அப்பாஸ் முடிவு செய்தார்.

அதன்படி சில நெருங்கிய உறவினர்கள், கிராமத்தார்கள் உதவியுடன் அவர்  தனது தாயாரின் உடலை தோள்களில் ஏந்தியபடி, பனி படர்ந்த சத்னா டாப் என்னும் மலைச் சிகரத்தை நடந்தே கடந்து கர்ணாவுக்கு செல்வது என்று முடிவெடுத்து புறப்பட்டு, நடந்த தனது கிராமத்தை அடைந்தார். அங்கு இறுதி சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மாவட்ட நிர்வாகமானது மோசமான வானிலை காரணமாகத்தான் எங்களால் எதுவும் உதவி எமுடியவில்லை.இருந்த போதிலும் நேற்றுதான் எங்களால் ஹெலிகாப்டர் ஒன்றை ஏற்பாடு செய்ய முடிந்தது. ஆனால் அவர்கள் அதற்க்குள் அவர்கள் புறப்பட்டு விட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இதே போல ராணுவ செய்தி தொடர்பாளர் கலோனியல் ராஜேஷ் கைலா செய்தியாளர்களிடம் பேசும் பொழுது மரணம் அடைந்த பெண்ணின் உடலை கொண்டு சேர்க்க எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்தோம் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com