இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வரைவுச் சட்டம் இறுதி செய்யப்பட வாய்ப்பு

ஜிஎஸ்டி கவுன்சிலின் 10-ஆவது ஆலோசனைக் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் சனிக்கிழமை (பிப். 18) நடைபெறுகிறது.மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெறும்

ஜிஎஸ்டி கவுன்சிலின் 10-ஆவது ஆலோசனைக் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் சனிக்கிழமை (பிப். 18) நடைபெறுகிறது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) வரைவுச் சட்டம் இறுதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், குறைவான வரிவிதிப்பின் பலன்கள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் வகையிலான சட்டப் பிரிவை வகுப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இதைத் தவிர, வரிவிதிப்பு நடைமுறைகளில் ஏற்படும் சில பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக தேசிய ஜிஎஸ்டி தீர்ப்பாயம் அமைப்பது தொடர்பாகவும் கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலவரப்படி வேளாண்மைத் துறையின் கீழ் பரவலாக வரிச் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனை முறைப்படுத்தும் வகையில், வேளாண்மை மற்றும் விவசாயிகள் குறித்து தெளிவான வரையறையை வெளியிடுவது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்பட இருக்கிறது.
ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. எனினும், மத்திய சரக்கு-சேவை வரி (சிஜிஎஸ்டி) மசோதா, ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி (ஐஜிஎஸ்டி) மசோதா ஆகியவற்றுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டியது உள்ளது. இது தவிர அனைத்து மாநில சட்டப் பேரவைகளிலும் மாநில சரக்கு-சேவை வரி (எஸ்ஜிஎஸ்டி) மசோதா நிறைவேற்றப்பட
வேண்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com