டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் பதவியேற்பு

டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் இன்று செவ்வாய்க்கிழமை பதவியேற்றார்.
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் பதவியேற்பு

மும்பை: டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் இன்று செவ்வாய்க்கிழமை பதவியேற்றார்.
முன்னதாக தலைவர் பொறுப்பிலிருந்து சைரஸ் மிஸ்திரி கடந்த ஆண்டு நீக்கப்பட்டார். இதையடுத்து, டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்த என்.சந்திரசேகரன் (54) புதிய தலைவராக கடந்த ஜனவரி மாதம் 12-ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அவர் தலைவராக இன்று பொறுப்பேற்றார்.
"சந்திரா' என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் அவர், 150 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் பார்சி இனத்தைச் சாராத முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய பணி சவால் நிறைந்து என்று கருத்து தெரிவித்த அவர், அந்த சவாலை மாறுபட்ட வழிமுறையில் திறமையாக எதிர்கொண்டு வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரூ.1,000 கோடிக்கும் மேலாக இழப்பை ஏற்படுத்தியுள்ள ரத்தன் டாடாவின் கனவான நானோ கார் திட்டம் குறித்தும் முடிவெடுக்கும் பொறுப்பும் சந்திரசேகரன் மீதே விழுந்துள்ளது.
நீண்ட தூர மாரத்தான் ஓட்டப்பந்தய வீரரான சந்திரசேகரன் சர்வதேசப் போட்டிகளில் வெற்றிகளைக் குவித்தவர்.
தடைகள் பல கடந்து வெற்றிகளைக் குவித்த சந்திரசேகரன், ரூ.7 லட்சம் கோடி மதிப்புள்ள உலகளாவிய டாடா குழுமத்தின் நிர்வாகப் பிரச்னைகளை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை அனைவரும் எதிர்நோக்கியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com