தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க மத்திய அரசு திட்டம்

தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையை 36-இல் இருந்து 18-ஆக பாதியாக குறைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விரைவில் மசோதாவை கொண்டு வரவிருக்கிறது.

தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையை 36-இல் இருந்து 18-ஆக பாதியாக குறைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விரைவில் மசோதாவை கொண்டு வரவிருக்கிறது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
நாட்டில் தற்போது 36 தீர்ப்பாயங்கள் உள்ளன. இந்த தீர்ப்பாயங்கள், வருமான வரி, மின்சாரம், நுகர்வோர் பாதுகாப்பு, நிறுவனங்கள் சட்டம், ரயில்வே விபத்துகள் தொடர்பான விவகாரங்களைக் கையாண்டு வருகின்றன.
இந்த தீர்ப்பாயங்களை பல்வேறு மத்திய அமைச்சகங்கள் கவனித்து வருகின்றன. தீர்ப்பாயங்களின் நிர்வாகம் தொடர்பாக குறைதீர்க்கும் அமைப்பாக மத்திய சட்ட அமைச்சகத்தின்கீழ் வரும் சட்ட விவகாரங்கள் துறை உள்ளது. இந்நிலையில், தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையை 36-இல் இருந்து 18-ஆக குறைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
36 தீர்ப்பாயங்களில் பெரும்பாலானவை ஓரே பணியையே செய்து வருவதாக மத்திய அரசு கருதுகிறது. பிரதமர் நரேந்திர மோடியும் கடந்த 2015-ஆம் ஆண்டு பேசியபோது தீர்ப்பாயங்களின் செயல்பாட்டுக்கு தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். மேற்கண்ட காரணங்களை கவனத்தில் கொண்டு, தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
தீர்ப்பாயங்கள் அரசியல் விதிப்படியே உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது அல்லது ஒன்றுடன் ஒன்று இணைப்பது அல்லது தீர்ப்பாயங்களை ரத்து செய்வது ஆகியவற்றில் எந்த நடவடிக்கையை மேற்கொண்டாலும், அதை உடனடியாக செய்துவிட முடியாது. படிப்படியாகத்தான் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதற்காக நாடாளுமன்றத்தில் மசோதாவைக் கொண்டு வந்து மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். எனவே, நாடாளுமன்றத்தில் விரைவில் இதுதொடர்பாக மசோதாவை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com