நதி நீர் விவகாரம்: சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட பஞ்சாப், ஹரியாணாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

சட்லஜ்-யமுனை கால்வாய் திட்டம் தொடர்பாக பஞ்சாப், ஹரியாணாவில் பதற்றம் நிலவி வருவதை அடுத்து, அங்கு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டுமென்று இரு மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நதி நீர் விவகாரம்: சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட பஞ்சாப், ஹரியாணாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

சட்லஜ்-யமுனை கால்வாய் திட்டம் தொடர்பாக பஞ்சாப், ஹரியாணாவில் பதற்றம் நிலவி வருவதை அடுத்து, அங்கு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டுமென்று இரு மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாபுக்கும் அதன் அண்டை மாநிலமான ஹரியாணாவுக்கும் இடையேயான நீர்ப் பகிர்வை உறுதி செய்ய சட்லஜ்-யமுனை கால்வாய் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பஞ்சாப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பஞ்சாப் அரசின் தீர்மானத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
இதையடுத்து ஹரியாணா அரசு கால்வாய்க்கான கட்டுமானத்தைத் தொடங்கியது. ஆனால், கால்வாய்த் திட்டம் தொடர்பாக பஞ்சாப் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை எதிர்த்து ஹரியாணா அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.
இதற்கு மத்தியில், இந்த கால்வாய்த் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி ஹரியாணா மாநிலம் அம்பாலாவில் இருந்து பஞ்சாபை நோக்கி பேரணி நடத்த இருப்பதாக இந்திய தேசிய லோக் தளக் கட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் இரு மாநில அரசுகளுக்கு ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், "சட்லஜ்-யமுனை கால்வாய் திட்டத்தை மையமாக வைத்து இரு மாநிலங்களிலும் எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் ஏற்படக் கூடாது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்' என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com