மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு

பிருஹன் மும்பை மாநகராட்சி உள்ளிட்ட 10 மாநகராட்சிகள், 25 மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள், 283 ஊராட்சிகளுக்குமான தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்படுகின்றன.

பிருஹன் மும்பை மாநகராட்சி உள்ளிட்ட 10 மாநகராட்சிகள், 25 மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள், 283 ஊராட்சிகளுக்குமான தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்படுகின்றன.
பிருஹன் மும்பை, தாணே, உல்லாஸ் நகர், நாசிக், புணே, பிம்ப்ரி - சிஞ்வாட், சோலாபூர், அகோலா, அமராவதி, நாகபுரி ஆகிய 10 மாநகராட்சிகளுக்கும், 25 மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள், 283 ஊராட்சிகளுக்குமான தேர்தல்கள் இரு கட்டங்களாக நடைபெற்றன.
இறுதிகட்டமாக, 10 மாநகராட்சிகள், 11 மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள், 118 ஊராட்சிகள் ஆகியவற்றுக்கான தேர்தல் வாக்குப்பதிவுகள் புதன்கிழமை நடைபெற்றன. இதில் 10 மாநகராட்சித் தேர்தல்களில் 56 சதவீத வாக்குகள் பதிவாகின. இவற்றில் முக்கியமாகக் கருதப்படும் பிருஹன் மும்பை மாநகராட்சித் தேர்தலில் 55 சதவீத வாக்குகள் பதிவாகின.
இதையடுத்து, இந்தத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணும் பணிகள் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் தொடங்கவுள்ளன. எனவே, மாலை 6 மணிக்குள்ளாக தேர்தல் முடிவுகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளான ஆளும் பாஜகவும், சிவசேனையும் தனித்தனியாக போட்டியிட்டன. மேலும், தேர்தல் பிரசாரங்களில் அக்கட்சிகள் ஒன்றையொன்று கடுமையாக விமர்சித்தன. இதன் காரணமாகவே, மகாராஷ்டிர தேர்தல் களம் சூடிபிடித்தது. இந்த இரு கட்சிகளைத் தவிர, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இந்தத் தேர்தல்களில் களம் கண்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com