மும்பை நகராட்சி தேர்தல்: வெற்றிக் கொடி நாட்டப்போகும் சிவசேனா!

நாட்டிலேயே மிகப் பெரியதும், பொருளாதார வளம் மிக்கதுமான மும்பை நகராட்சிக்கு நடைபெற்ற  தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் முன்னணி பெற்று சிவசேனா கட்சி வெற்றி முகத்தில் உள்ளது.
மும்பை நகராட்சி தேர்தல்: வெற்றிக் கொடி நாட்டப்போகும் சிவசேனா!

மும்பை: நாட்டிலேயே மிகப் பெரியதும், பொருளாதார வளம் மிக்கதுமான மும்பை நகராட்சிக்கு நடைபெற்ற  தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் முன்னணி பெற்று சிவசேனா கட்சி வெற்றி முகத்தில் உள்ளது.

மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் அமைந்துள்ள 'பிரிஹன் மும்பை நகராட்சியானது' இந்தியாவிலேயே பழமையானதும் முக்கியமானதுமான ஒன்றாகும். அத்துடன் நாட்டிலேயே பொருளாதார வளம் மிக்க நகராட்சியாகவும்மும்பை விளங்குகிறது. உதாரணமாக 2016-17 ஆம் நிதியாண்டில் இந்த நகராட்சியின் வருடாந்திர பட்ஜெட் ரூ.37000 கோடியாகும். 

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த நகராட்சியின் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. சிறிதுகாலம் முன்பு வரை கூட்டணிக்கட்சிகளாக இருந்த பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா ஆகிய இரு கட்சிகளும் இந்த தேர்தலில் தனித்தனியாக பங்கேற்றன. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது.

இதில் ஆரம்பத்திலிருந்தே சிவசேனாவின் கை ஓங்கி இருந்தது. மொத்தமுள்ள 227 இடங்களில் சிவசேனா கட்சி 94 இடங்களில் முன்னணியில் உள்ளது. பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்த வரை 60 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் 22 இடங்களில் வென்றுள்ளது. தொடர்ந்து மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி 10 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 8 இடங்களிலும், அகில இந்திய மஜ்லிஸ் ஈ இத்தாகதுல் முஸ்லிமீன் கட்சி 4 இடங்களிலும் வென்றுள்ளது.

சிவசேனாவின் வெற்றியை அதன் கட்சித் தொண்டர்கள் மும்பை முழுவதும் கொண்டாடிவருகின்றனர். அதேநேரம் இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்த மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் தன்னுடைய பாதையை ராஜிநாமா செய்வதாக கூறியுள்ளார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com