கேந்திரீய வித்யாலயாக்களில் இணையவழியில் மாணவர் சேர்க்கை

நாடு முழுவதும் உள்ள கேந்திரீய வித்யாலயா (கேவி) பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வரும் கல்வியாண்டு (2017-18) முதல் இணையதளம் வாயிலாக

நாடு முழுவதும் உள்ள கேந்திரீய வித்யாலயா (கேவி) பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வரும் கல்வியாண்டு (2017-18) முதல் இணையதளம் வாயிலாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
தில்லியின் புறநகர்ப் பகுதியான ஷாதராவில் புதிய கேந்திரீய வித்யாலயாவுக்கான அடிக்கல்லை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் வியாழக்கிழமை நாட்டினார். அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது: அனைவருக்கும் தரமான கல்வியை வழங்கும் நோக்கத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம்தான் சிறந்த குடிமக்களை திடமான குணநலன்களுடன் உருவாக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது.
தங்கள் பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என பெற்றோர் காணும் கனவை நனவாக்கும் வகையில் கேந்திரீய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கல்வியுடன் விளையாட்டிலும் மாணவர்களை ஈடுபடுத்தி உடல் ரீதியாகவும் அவர்களுக்கு பயிற்சி கொடுத்து, கடின உழைப்பையும் கூட்டாக போதிக்கும் முயற்சியிலும் கேந்திரீய வித்யாலயா பள்ளிகள் ஈடுபட்டுள்ளன.
கேந்திரீய வித்யாலயாவில் சேருவதற்கு விண்ணப்பங்களைப் பெறவும் பின்னர் அவற்றை சமர்ப்பிக்கவும் பெற்றோர்கள் திண்டாடும் நிலையைத் தவிர்க்க வரும் கல்வியாண்டு முதல் இணையதளம் மூலம் விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com