பாலியல் குற்றவாளிகளின் விவரங்கள்: முதல் முறையாக வெளியிடுகிறது கேரள அரசு

நாட்டிலேயே முதல்முறையாக பாலியல் குற்றவாளிகள் பற்றிய விவரங்களை கேரள அரசு விரைவில் வெளியிட உள்ளது என்று அந்த மாநில ஆளுநரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான பி.சதாசிவம் கூறினார்.
பாலியல் குற்றவாளிகளின் விவரங்கள்: முதல் முறையாக வெளியிடுகிறது கேரள அரசு

நாட்டிலேயே முதல்முறையாக பாலியல் குற்றவாளிகள் பற்றிய விவரங்களை கேரள அரசு விரைவில் வெளியிட உள்ளது என்று அந்த மாநில ஆளுநரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான பி.சதாசிவம் கூறினார்.
அந்த மாநிலத்தில் ஓடும் காரில் பிரபல நடிகை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையில், ஆளுநர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கேரள சட்டப் பேரவையின் நான்காவது கூட்டத் தொடரின் முதல் நாளான வியாழக்கிழமை உரையாற்றிய அவர், இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
கேரளத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. மாநிலத்தில் பாலியல் குற்றவாளிகள் பற்றிய விவரங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.
கேரளத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக இயங்கும் "நிர்பயா செல்' சிறப்பான முறையில் செயல்பட்டுவந்த போதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் நிவாரணம் கிடைப்பதில்லை.
எனவே, மாநிலத்தில் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, நிதியம் ஒன்றை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணி அரசு அமைக்கவுள்ளது.
மேலும், மகளிர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, பெண்களுக்கென தனித் துறையை உருவாக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதுதவிர, ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெண் காவல் அதிகாரி, ஒவ்வொரு ஊராட்சிக்கும் நேரடியாகச் சென்று, பெண்களின் பிரச்னைகளைக் கேட்டு அவர்களுக்கு தீர்வுகளை அளிப்பது கட்டாயமாக்கப்படும் என்றார் அவர்.
அப்போது, அவையின் மையப்பகுதியில் திரண்ட காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநிலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையெனக் கூறி, கோஷமிட்டனர். அவர்களிடம், பெண்களின் பாதுகாப்புக்குத் தேவையானஅனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறி ஆளுநர் சதாசிவம் தனது உரையைத் தொடர்ந்தார்.
அப்போது, ""பெண்களை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களை மன்னிக்க முடியாது'' என்றார் சதாசிவம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com