மார்ச் 15-இல் கர்நாடக பட்ஜெட் தாக்கல்

2017-18-ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் மார்ச் 15-ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

2017-18-ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் மார்ச் 15-ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

பெங்களூரு விதானசெளதாவில் புதன்கிழமை முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 15 முதல் 28-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. தற்போது தாக்கல் செய்யப்படுவது காங்கிரஸ் அரசின் 4-ஆவது பட்ஜெட்டாகும். ஜே.எச்.பாட்டீல், தரம்சிங் முதல்வர்களாக இருந்த காலத்தில் துணை முதல்வராக இருந்து நிதித் துறையை கவனித்து வந்த சித்தராமையா, 2013-இல் முதல்வரான பிறகு நிதித் துறையை தன்வசமே வைத்துக் கொண்டார்.

மார்ச் 15-ஆம் தேதி தொடங்கவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தனது 12-ஆவது பட்ஜெட்டை முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்யவிருக்கிறார். கர்நாடக அரசியல் வரலாற்றில் இத்தனை பட்ஜெட்களை தாக்கல் செய்த நிதியமைச்சர் யாரும் இல்லை என்பது புதிய வரலாறாகும்.

2018-ஆம் ஆண்டில் கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்கவிருப்பதால், மக்களை ஈர்க்கும் வகையில் பட்ஜெட்டை தயாரிக்க சித்தராமையா திட்டமிட்டுவருகிறார். மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுவதால், விவசாய சங்கங்களின் கோரிக்கைக்கு இணங்க விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்து அதற்கான அறிவிப்பை பட்ஜெட்டில் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையிலான பல புதிய திட்டங்களையும் அறிவிக்க முதல்வர் சித்தராமையா திட்டமிட்டுள்ளார். மேலும் பட்ஜெட் மதிப்பீட்டை ரூ.1.63 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தவும் யோசித்துவருகிறார்.

முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட் குறித்து மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com